இந்தியாவில் அலுவலகத்தை காலி செய்கிறதா ட்விட்டர்.. எலான் மஸ்கின் திட்டம் தான் என்ன?

ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதில் இருந்து, பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகின்றார் எலான் மஸ்க். கையகப்படுத்திய முதல் நாளே பல முக்கிய உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதிலிருந்து இன்று வரையில் எந்த நேரத்தில் என்ன செய்ய போகிறாரோ? என்ற கேள்வி ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஏற்கனவே இந்திய ஊழியர்கள் உள்பட பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

தற்போது இந்தியாவில் உள்ள சில அலுவலகங்களை மூட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அலுவலகங்கள் மூடல்

இந்திய அலுவலகங்கள் மூடல்

ட்விட்டர் இந்தியாவில் உள்ள டெல்லி மற்றும் மும்பையில் இயங்கி வரும் அலுவலகங்களை காலி செய்யவுள்ளதாகவும், அதற்கான வேலையில் ஏற்கனவே இறங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரில் இயங்கி வந்த ட்விட்டர் அலுவலகம் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

செலவு குறைப்பு நடவடிக்கைஒய்

செலவு குறைப்பு நடவடிக்கைஒய்

செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என தெரிகிறது. தற்போது மேற்கண்ட அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மொத்தத்தில் இந்தியாவில் இனி ட்விட்டருக்கு என்று தனியாக அலுவலகம் இருக்குமா? இனி என்ன செய்யப் போகிறார் எனபல கேள்விகள் எழுந்துள்ளது.

சிங்கப்பூர் அலுவலகம்

சிங்கப்பூர் அலுவலகம்

கடந்த ஜனவரி 11 அன்று ட்விட்டரின் சிங்கப்பூரில் உள்ள அலுவலகத்தினை கால செய்யும் ஒரே வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ட்விட்டரை கையகப்படுத்திய சில தினங்களிலேயே தனது ஒவ்வொரு நாளும் 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகவும், ஆக செலவினைக் குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் அவ்வப்போது இதுபோன்ற கிறுக்குத் தனமான நடவடிக்கை இருக்கும். அவை நடைமுறைக்கு சரி வந்தால் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இல்லையேல் அதனை மாற்றியமைப்போம் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

 

 ட்விட்டர் தலைமை அலுவலகத்தின் நிலை

ட்விட்டர் தலைமை அலுவலகத்தின் நிலை

இங்கு மட்டும் அல்ல, ட்விட்டரின் தலைமை அலுவலகத்திலும் சரியான வாடகை வாடகை கொடுக்கவில்லை என்ற பதற்றம் இருந்து வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, ட்விட்டரின் தலைமை அலுவலகத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும், துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தினால் அலுவலகம் அலுவலகமாக இல்லை. டாய்லெட் பேப்பர்களை கையோடு வீட்டில் இருந்து ஊழியர்கள் கொண்டு வருவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

எதிர்காலம் கேள்விக் குறி தான்

எதிர்காலம் கேள்விக் குறி தான்

இப்படி உலகம் முழுவதும் இருக்கும் ட்விட்டர் அலுவகங்களின் நிலை இதுவாகத் தான் உள்ளது. ட்விட்டரின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் ட்விட்டர் நிறுவனத்தினை எலான் கையகப்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் ட்விட்டரின் எதிர்காலம் கேள்விக்குறி தான் என கூறி வந்தனர். தற்போது அது மெய்தானோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

வருவாய் அதிகரிப்பு இல்லை

வருவாய் அதிகரிப்பு இல்லை

ஒரு புறம் செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மறுபுறம் வருவாயை அதிகரிக்க போதிய நடவடிக்கை இல்லை என்றும் கூறப்படுகின்றது. ப்ளு டிக்கிற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. எனினும் இது பெரியளவில் கைகொடுக்கவில்லை என்றே கூறலாம். தற்போது இந்த ப்ளூ டிக்கிற்கு மாற்று வழியினை திட்டமிட்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+