டிஜிட்டல் சந்தைக்கு மிகவும் முக்கிய காலக்கட்டமாக இருந்து 2022 ஆம் ஆண்டு, ஒருபக்கம் வருடம் முழுவதும் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவாரா வாங்கமாட்டாரா என்பது, வாங்கிய பின்பு அதிரடியான பணிநீக்கமும், டிவிட்டருக்கு போட்டியாக mastodon அறிமுகம் என பரபரப்பாகவே இருந்தது. இந்த நிலையில் தற்போது டிவிட்டர் என்ற நிறுவனமே இல்லை என்பது தெரியுமா..?
எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து டிவிட்டரை வாங்க பல முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், எதுவும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதால் டிவிட்டரை சுற்றி பல வதந்திங்கள் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் எலான் மஸ்க் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

டிவிட்டர் பயணத்தில் மிகவும் முக்கிய கட்டமாக எலான் மஸ்க்-ன் கனவு திட்டமான சூப்பர் ஆப் 'X' உடன் டிவிட்டர் இணைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் டிவிட்டர் என்ற நிறுவனமே தற்போது இல்லை, டிவிட்டர் இன்க், X Corp உடன் இணைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் X Corp என்பது ஒரு தனியார் நிறுவனம், Nevada-வில் பதிவு செய்யப்பட்டு, சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியாவில் முக்கிய வர்த்தக தளமாக கொண்டு இயங்கி வருகிறது என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்தார் எலான் மஸ்க்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது குறித்து முடிவு செய்யப்பட்ட போது, எலான் மஸ்க் தனது நீண்ட கால கனவு திட்டமான X ஆப் உருவாக்கும் திட்டத்தின் செயல்பாடுகள் மீண்டும் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதை எலான் மஸ்க் X, the everything app என அழைக்கிறார். டிவிட்டர் இணைப்பு மூலம் X உருவாக்கும் வேகத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க் X என்னும் the everything app என்பது ஒரு சூப்பர் ஆப் போல இத்தளத்தில் சமுக வலைத்தளம் முதல் பேமெண்ட், ஷாப்பிங் வரையில் அனைத்தும் இருக்கும். இதற்கு எளிய உதாரணம் சீனாவின் WeChat. WeChat செயலில் சேட்டிங் சேவை மட்டும் அல்லாமல் தினமும் மக்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் இதில் இருக்கும், இதனால் சீன மக்கள் WeChat செயலியை விட்டு வெளியே வருவதே இல்லை என்பது தான் உண்மை.
இதே மேஜிக்-ஐ தான் எலான் மஸ்க் தனது X ஆப் மூலம் கொண்டு வர முயற்சி செய்கிறார். மேலும் இந்த X என்ற பெயர் உருவாக முக்கிய காரணமும் உண்டு. 1999 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் X.Com இந்த தளம் ஆன்லைன் பேங்கிங் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் அமெரிக்காவில் ஆன்லைன் வங்கியில் சேவையை கொடுத்த தளம்.

பின்னாளில் இது PayPal உடன் இணைக்கப்பட்டு பெரும் பேமெண்ட் சாம்ராஜ்ஜியமாக மாறிய பின்பு அதில் இருந்து வெளியேறி டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் என இரு மாபெரும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த சென்டிமென்ட் உடன் தான் எலான் மஸ்க் தற்போது X என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications