வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் என்கேஜ்மென்ட் அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது டிவிட்டர்.
எலான் மஸ்க் தலைமையில் விரைவில் லாபகரமான வளர்ச்சியை பதிவு செய்யும் என அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை வந்தாலும், எலான் மஸ்க்-ஐ நம்பியிருக்கும் பிற நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் சோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்திற்கும் முக்கிய பிரச்சனை உருவாகியுள்ளது. இந்த பிரச்சனை மூலம் டிவிட்டர் ஊழியர்கள் மத்தியில் இந்நிறுவனம் தாக்கு பிடிக்குமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ-வில் உள்ள டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலக இடத்திற்கு சுமார் 136,250 டாலர் மதிப்பிலான வாடகை தொகையை செலுத்தத் தவறியதால் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Columbia Reit நிறுவனம்
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டிவிட்டர் அலுவலகத்தின் உரிமையாளர் நிறுவனமான Columbia Reit கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஹார்ட்ஃபோர்ட் கட்டிடத்தின் 30 வது மாடிக்கு வாடகை செலுத்தப்படாவிட்டால், ஐந்து நாட்களில் அதன் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என டிவிட்டர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
வழக்கு
கொலம்பியா ரீட் கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவின் மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகாரில், டிவிட்டர் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாகவும், வாடகை அளிக்காமல் இருக்கிறது என்றும், நோட்டீஸ் அனுப்பியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என தனது புகாரில் தெரிவித்துள்ளது.
சாட்டர்ட் விமானங்கள்
2022 டிசம்பரில் இரண்டு சாட்டர்ட் விமானங்களுக்கு பணம் செலுத்த மறுத்ததற்காக டிவிட்டர் நிறுவனம் மீது மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் பல முக்கியமான செலவின குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதில் வாடகை பெரும் சுமையாக டிவிட்டர் நிர்வாகத்திற்கு இருந்தது.
200 பில்லியன் டாலர் சொத்து
மார்டன் தொழில் உலகில் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு தான் மிகப்பெரிய விஷயம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கையில் கடந்த 5 வருடத்தில் சத்தமே இல்லாமல் இருவர் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உயர்ந்து வியக்க வைத்தனர்.
எலான் மஸ்க்
இதில் ஒருவர் எலான் மஸ்க், டெஸ்லா பங்குகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது மூலம் எலான் மஸ்க் 219 பில்லியன் டாலர் வரையிலான சொத்து மதிப்பை கொண்டு கிட்டதட்ட ஒரு வருட காலத்திற்கு 200 பில்லியன் டாலர் கிளப்-ல் தனி ஆளாக இருந்தார்.
டெஸ்லா பங்குகள்
2022 ஆம் ஆண்டில் மட்டும் டெஸ்லா பங்குகள் சுமார் 69.20 சதவீதம் வரையில் சரிந்து வெறும் 123.18 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வருடம் மட்டும் சுமார் 276.75 டாலர் வரையில் டெஸ்லா பங்குகள் சரிந்துள்ளது. டெஸ்லா நிறுவன பங்குகளின் 52 வார உயர்வின் அளவு 402.67 டாலராகும்.
எலான் மஸ்க் - டிவிட்டர்
டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றியதில் இருந்து பல அதிரடி மாற்றங்கள், கட்டுப்பாடுகள் மூலம் வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்வது மட்டும் அல்லாமல் விரைவில் லாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் எலான் மஸ்க் substack என்னும் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
6 நிறுவனங்கள்
எலான் மஸ்க் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது Tesla, SpaceX, The Boring Company, Neuralink, Twitter மற்றும் OpenAI எனக் கிட்டத்தட்ட 6 நிறுவனங்கள் உள்ளது. இதில் எலான் மஸ்க் SpaceX இன் நிறுவனர், CEO மற்றும் தலைமை பொறியாளர், டெஸ்லா-வில் CEO மற்றும் ப்ராடெக்ட் ஆர்கிடெக்ட், டிவிட்டரின் உரிமையாளர் மற்றும் CEO, The Boring Company இன் நிறுவனர், Neuralink மற்றும் OpenAI இன் இணை நிறுவனர்.


Click it and Unblock the Notifications