டெல்லி: ட்விட்டர் நிறுவனம் மிகப்பெரிய பணி நீக்கத்தினை இந்தியாவில் செய்துள்ளது.
இந்த பணி நீக்கம் ட்விட்டரின் பொறியாளர்கள், முழு மார்கெட்டிங் பிரிவு மற்றும் கம்யூனிகேஷன் துறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பணி நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தினை எலான் மஸ்க் வாங்கிய நிலையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையினை தொடர்ந்து எடுத்து வருகின்றது.
யார் யார் பணி நீக்கம்?
எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. இந்த பணி நீக்கம் விற்பனை பிரிவு, பொறியியல் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் விற்பனை பிரிவு மற்றும் பொறியியல் துறையில் சிலர் தக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
உயர் அதிகாரிகள் பணி நீக்கம்
எலான் மஸ்கின் இந்த முடிவானது ட்விட்டரை கையகப்படுத்திய நிலையில், தொடர்ந்து பல செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்ட டாப் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு 50% பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ப்ளூ டிக்கிற்கு கட்டணம்
இது மட்டும் அல்ல ட்விட்டரின் ப்ளூ டிக்கிற்கு 8 டாலர் மாதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. எனினும் ட்விட்டர் இந்தியா குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ட்விட்டரை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அது மட்டும் அல்ல உள்கட்டமைப்பு செலவினங்களை குறைக்கவும், இன்னும் பல செலவு குறைப்பு திட்டங்களை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அலுவலகங்களை மூட திட்டமா?
ட்விட்டரின் இந்த தொடர்ச்சியான பணி நீக்கம் காரணமாக ஏற்கனவே பல திறன் வாய்ந்த ஊழியர்கள் பலரும், தாங்களாகவே முன் வந்து பணியினை ராஜினாமா செய்து வருகின்றனராம். இதனால் ட்விட்டரில் திறமை வாய்ந்த ஊழியர்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதோடு அலுவலகங்கள் சிலவற்றை மூட திட்டமிட்டுள்ள நிலையில், ட்விட்டர் பயனர்களின் தரவுகளை பாதுகாப்பு செய்வதிலும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மெயில் வரும்
பணி நீக்கம் யார் செய்யபப்படவில்லையோ? அவர்களின் பணி குறித்து மெயிலில் அறிவிக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களின் தனிப்பட்ட மெயிலில் மற்ற தகவல்கள் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
மொத்தத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு பெரும் சவால் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications