எலான் மஸ்க விடுங்க.. நம்ம அதானிய பாருங்க.. வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே எலான் மஸ்கிற்கு நெருக்கடிகள் அதிகளவில் இருந்து வருகின்றது. சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திய போதே தினசரி தனக்கு 4 மில்லியன் டாலர் நஷ்டம் உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 100 பில்லியன் டாலருக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது.

இதற்கிடையில் ஒரு நாளைக்கு 8.6 பில்லியன் டாலர் (சுமார் 2500 கோடி ரூபாய்) அளவுக்கு நஷ்டம் கண்டுள்ளார். உண்மையில் இது எலான் மஸ்கிற்கு போறாத காலம் தான்.

எலான் மஸ்கை கடுமையாக விமர்சித்த ஜோ பைடன்.. ட்விட்டரை எதற்காக வாங்கினார் தெரியுமா? எலான் மஸ்கை கடுமையாக விமர்சித்த ஜோ பைடன்.. ட்விட்டரை எதற்காக வாங்கினார் தெரியுமா?

மிகப்பெரிய இழப்பு

மிகப்பெரிய இழப்பு

ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டில் இவ்வளவு பெரிய இழப்பினை கண்ட முதல் பில்லியனர் ஆவார். எலான் மஸ்கின் இந்த பின்னடைவுக்கு காரணம், டெஸ்லாவின் பங்கானது 2 வருடத்தில் இல்லாத அளவுக்கு நேற்று மோசமான சரிவினைக் கண்டுள்ளது.

இவ்வளவு இழப்பா?

இவ்வளவு இழப்பா?

ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி, எலான் மஸ்க் கடந்த 1 ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர் இழப்பினை கண்டுள்ளார். எப்படி இருப்பினும் இன்றும் அவர் உலகின் சிறந்த பில்லியனரகளின் லிஸ்டில் தான் 170 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.

கடந்த ஆண்டு நிலவரம்

கடந்த ஆண்டு நிலவரம்

ஓரு வருடத்திற்கு முன்பு எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 340 பில்லியன் டாலராகும். கடந்த திங்கட்கிழமையன்று எலான் மஸ்கிற்கு 8.6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. அன்று டெஸ்லா பங்கின் விலையானது 6.85 குறைந்து, 167.87 ஆக இருந்தது. இது கடந்த நவம்பர் 2020ல் இருந்து பார்க்கும்போது குறைந்த விலையாகும்.

மார்கின் சொத்து இழப்பு?

மார்கின் சொத்து இழப்பு?

பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் 83.5 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

பைனான்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சாங்பெங் ஜாவோ கிட்டதட்ட 82 பில்லியன் டாலர் இழப்பினை கண்டார்.

ஜெப் பெசோஸ்

ஜெப் பெசோஸ்

இதே அமேசானின் தலைவர் ஜெப் பெசோஸ்-ந் சொத்து மதிப்பு 76.7 பில்லியன் டாலர் இழப்பினை கண்டுள்ளர்.

இதில் சுவாரஷ்யமான விஷயம் என்னவெனில் டாப் 10 லூசர்களில்7 பில்லியனர்கள் ஐடி துறையை சேர்ந்தவர்களாவர். டாப் 10 லூசர்களின் இழப்பு 183.5 பில்லியன் டாலராகும்.

கெளதம் அதானியின் சொத்து அதிகரிப்பு

கெளதம் அதானியின் சொத்து அதிகரிப்பு

இந்த பட்டியலில் கடந்த 1 ஆண்டில் சொத்து மதிப்பினை அதிகரித்த பில்லியனர்களில் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு கடந்த 1 ஆண்டில் 53 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இவர் ப்ளூர்ம் பெர்க் பில்லியனர் அறிக்கையின் படி மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 130 பில்லியன் டாலராகும்.

சொத்து அதிகரித்தோர்

சொத்து அதிகரித்தோர்

சொத்து அதிகரித்தோர் பட்டியலில் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 53 பில்லியனும், ஜெஃப் யாஸின் சொத்து மதிப்பு 29.40 பில்லியன் டாலரும், ஜாங்க் யிமிங்கின் சொத்து 10.40 பில்லியன் டாலரும், அலைன் வெர்டைமர் 10.30 பில்லியன் டாலரும், இன்னும் பலரும் இந்த லிஸ்டில் அடங்குவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter, tesla, SpaceX's Elon musk Wealth drops by Rs.2500 crore in one day

Elon Musk's net worth has fallen by more than $100 billion in a single year. Whereas Gautam Adani's assets have increased by $53 billion in the last 1 year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X