எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் யோசிக்கும் முன்பே தடாலடியாக 5 உயர் அதிகாரிகள் தங்களது பணியை விட்டு நீக்கினார் மஸ்க்.
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 24 மணிநேரத்திற்குள் டிவிட்டர் Tweet Tiles என்ற புதிய சேவையைச் சோதனை செய்து வருவதாக அறிவித்துள்ளது.
மேலும் டிவிட்டரில் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட டாப் 3 அதிகாரிகள் 100 மில்லியன் டாலர் உடன் வெளியேறியுள்ளனர்.
எலான் மஸ்க்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பெரும் போராட்டத்திற்குப் பின்பு டிவிட்டர் நிறுவனத்தைச் சுமார் 46.5 பில்லியன் டாலர் செலவில் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக அலுவலகத்திற்கு வரும் முன்னரே 5 உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தார்.
5 பேர் பணிநீக்கம்
டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை நிதியியல் அதிகாரி Ned Sega, சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே, பொது ஆலோசகர் சீன் எட்ஜெட், தலைமை வாடிக்கையாளர் அதிகாரி சாரா பெர்சோனெட் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
CXO பிரிவு அதிகாரிகள்
டிவிட்டர் நிறுவனத்தின் CXO பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்குச் சம்பளத்தில் பணமாக அளிப்பதை விடவும் பங்குகள் வாயிலாகத் தான் அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் திடீரெனப் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது நிர்வாக மாற்றத்தாலோ பணிநீக்கம் செய்யப்பட்டாலோ வேலை நீக்க ஊதியம், பகிரப்படாத பங்குகள், போனஸ் எனப் பலவற்றை அளிக்க வேண்டும்.
சலுகைகள்
இந்த நிலையில் CXO பிரிவில் இருக்கும் அதிகாரிகள் தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தால் வேலை நீக்க ஊதியம், பகிரப்படாத பங்குகள், போனஸ் ஆகியவை எதுவும் கிடைக்காது. இதனாலேயே தற்போது எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி அவர் கையாலே டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்து கடந்த 10 மாதமாகக் காத்திருந்தனர்.
100 மில்லியன் டாலர்
இதேவேளையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதால் CXO பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள பங்குகளுக்கும் சேர்த்துத் தான் பணத்தை அளிக்க வேண்டும். இதன் படி டிவிட்டர் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள 5 பேரில் 3 பேர் மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் உடன் வெளியேற உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
டிவிட்டரில் பராக் அகர்வால்
டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால், டிவிட்டரில் 2011 ஆம் ஆண்டு வெறும் 1000 ஊழியர்கள் மட்டுமே இருந்த போது சேர்ந்தார். நவம்பர் 2021ல் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ வாகப் பராக் அகர்வால் அறிவிக்கப்பட்டார்.
3 பேருக்கும் ஜாக்பாட்
இந்த நிலையில் எலான் மஸ்க் வந்தது பணிநீக்கம் செய்யப்பட்ட பராக் அகர்வால் ப்ளூம்பெர்க் கணக்குகள் படி, சுமார் $50 மில்லியன் பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் 37 மில்லியன் டாலரும், இந்திய அமெரிக்கரும், டிவிட்டர் நிறுவனத்தின் சட்ட, கொள்கை பிரிவின் தலைவரான விஜய காடே 17 மில்லியன் டாலரும் பெற உள்ளனர்.


Click it and Unblock the Notifications