உலகின் மிகப்பெரிய பில்லியனர் ஆன எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அதனை வாங்கியதில் இருந்தே பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். பணி நீக்கம் தொடங்கி பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றார்.
சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தில் எல்லாம் சரியாகும் வரையில், நாம் அதன் தலைமையகத்தில் தான் இருப்பேன். அதுவரையில் தலைமையகத்தில் தான் எனக்கு தூக்கம் என்றும் கூறினார்.

பாதிக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்
ட்விட்டரை வாங்கிய முதல் நாளே தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட 4 முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதன் பிறகு ட்விட்டர் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தார். இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது. குறிப்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்று பலரும் குற்றம்சாட்டினர்.

தேடுதல் வேட்டை
இப்படி பல சர்ச்சைகளில் சிக்சிய எலான் மஸ்க், தனது ட்விட்டரை கையகப்படுத்தியில் இருந்து, தினசரி 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகவும். இதனால் தனக்கு வேறு வழியில்லை எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முன்னதாக ட்விட்டரில் அனைத்தும் சரியாகும் வரையில் தலைமை அலுவலகத்தை விட்டு செல்லமாட்டேன் கூறியவர், தற்போது ட்விட்டருக்கு புதிய தலைவரை தேடுவதாக தெரிவித்துள்ளார்.

எல்லாம் முடிஞ்சுதா?
மேலும் தான் ட்விட்டரில் செலுத்தும் நேரத்தை குறைக்க விரும்புவதாகவும், இந்த சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைவரை தேடுவதாகவும் தெரிவித்துள்ளார். நிறுவனத்தில் செய்ய வேண்டிய அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து விட்டார் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் அறிய முடிகிறது.

ஊழியர்கள் பெரும் நிம்மதியா?
எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் நிம்மதியினை ஏற்படுத்தியிருக்கலாம் எனலாம். எந்த நேரத்தில் என்ன அறிவிப்பு வருமோ? அடுத்து என்ன நடக்குமோ? என்ற பதற்றத்தில் இருந்த ஊழியர்கள், இனி சுதந்திரமாக வேலை பார்க்க முடியும். இதுவே அவர்களை சரியாக வேலை செய்ய வழிவகுக்கும் எனலாம்.

இது தான் காரணமோ?
எனினும் எலான் மஸ்கின் இந்த கருத்தானது, கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் 56 பில்லியன் டாலர் இழப்பீடாக பெற்றதற்கு பங்குதாரர்கள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது. எலான் மஸ்க் தனது முழு பங்களிப்பையும் டெஸ்லா நிறுவனத்தில் செலுத்தவில்லை. ஆக எப்படி இவ்வளவு தொகையை இழப்பீடாக எலான் மஸ்க் பெறலாம் என்று கூறப்பட்டது. இது விதிகளுக்கு புறம்பானது என்று டெஸ்லா பங்குதாரர் ரிச்சர்ட் டோர்னெட்டா என்பவர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கொஞ்ச நாள் இருப்பேன்
எனினும் ட்விட்டரை இயக்க வலுவான ஒரு தலைமை கிடைக்கும் வரையில் நான் தொடர்ந்து ட்விட்டரை இயக்குவேன் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக ஒரு அறிக்கையில் ஊழியர்கள் பணியில் வலியினை உணரும் போதெல்லாம் அதனை விட, கூடுதலாக நானும் அனுபவிக்க வேண்டும் என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

அதிக செலவு செய்ய மாட்டேன்
அதுமட்டும் அல்ல எனது தனிப்பட்ட செலவுக்காக ஆண்டுதோறும் நான் பில்லியன் கணக்கில் செலவு செய்வதில்லை. அப்படி செய்தால் அது எனக்கு சிக்கலைத் தான் தரும், ஆனால் அதற்காக நான் இப்படி செய்யவில்லை. நான் சொந்தமாக தனி ஜெட் விமானம் வைத்துள்ளேன். இது எனது வேலைகளை விரைவாக செய்ய பயனுள்ளதாக இருக்கும் என்றும் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
இப்படி ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்யும் எலான், ட்விட்டர் தலைமை விவகாரத்தில் அவ்வளவு எளிதில் முடிவு எடுத்து விடுவாரா? என்ன பொறுத்திருந்தான் பார்ப்போமே..