இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் சிறு சிறு கடைகள், வணிகங்களும் டிஜிட்டல் வர்த்தக சந்தைக்குள் நுழைந்து அதிகப்படியான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு உருவாக்கிய ONDC தளத்தில் தற்போது உணவு டெலிவரி சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனங்கள், இதுநாள் வரையில் மக்களிடமும், உணவகங்களிடம் அதிகப்படியான கட்டணத்தை வசூலித்து பெரும் பணத்தை பார்த்த நிலையில், மத்திய அரசின் ONDC அறிமுகத்தின் மூலம் பெரும் விலை வித்தியாசத்தில் உணவுகளை டெலிவரி செய்வதால் டிவிட்டரில் மக்கள் சோமேட்டோ, ஸ்விக்கியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

ONDC தான் இன்று நாட்டின் முக்கிய விவாத பொருளாக உள்ளது. இந்தியாவில் அடுத்த UPI போன்ற புரட்சி குவிக் காமர்ஸ் சந்தையில் உருவாக்கும் என ஏற்கனவே தான் கூறியதாக ரவி கூறுகிறார்.

2030க்குள் சுமார் 42 கோடி ஆன்லைன் பையர்கள் இருப்பார்கள், அமேசான், பிளிப்கார்ட் இத்துறையில் மோனோபோலியாக இருக்கும் வேளையில் இந்திய அரசு ONDC-ஐ அறிமுகம் செய்துள்ளது.

ஸ்விக்கி, சோமேட்டோ-வுக்கு பெரிய ஆபத்து,
ஒரு McDonald's பர்கர் ஸ்விக்கி, சோமேட்டோ-வில் 282.5 ரூபாய், ONDC-யில் வெறும் 109.4 ரூபாய். மக்களுக்கு 60 சேமிப்பு

ONDC-க்கு மக்கள்கொடுக்கும் ஹைப்-ஐ சோதனை செய்த ஒருவர் டிவிட்டரில் பொதுவாக புட் டெலிவரி ஆப்-ல் ஆர்டர் செய்தால் 30 நிமிடத்திற்குள் உணவு வந்துவிடும். ஆனால் ONDC தளத்தில் 1 மணிநேரம். 30 நிமிடம் தாமதம் ஆனால் 30 சதவீதம் விலை குறைவு.

UPI மூலம் பர்ஸ்-களுக்கு வேலை இல்லாமல் போனது.
Digilocker மூலம் ஐடி கார்டுகளுக்கு வேலை இல்லாமல் போனது.
இப்போசது ONDC மூலம் சோமேட்டோ, அமேசான், ஸ்விக்கி-க்கு வேலை இல்லாமல் போகும். இதைவிட முக்கியமாக எந்தவிதமான கூப்பன் இல்லாமலும் 20 சதவீதம் குறைவான விலையில் பொருட்களை பெற முடியும்.

ONDC உண்மையான தாக்கம்..
அதே உணவு, அதே ஹோட்டல், அதே நேரம். விலை வித்தியாசத்தை நீங்களே பாருங்க.

ONDC வாயிலாக பேடிஎம் மூலம் ஆர்டர் செய்த உணவை சோமேட்டோ டெலிவரி ஊழியர் கொடுத்துள்ளார். அவர்களுக்கு இந்த ஆர்டர் சோமேட்டோ ஆப்-ல் தான் வந்ததாம், எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

தற்போது இந்தியா முழுக்க இருக்கும் மக்கள் பேடிஎம், Mystore, craftsvilla, spice money, மீஷோ, போன்பே நிறுவனத்தின் Pincode, சோமேட்டோ 16.13 சதவீத பங்குகளை கொண்டு உள்ள Magicpin ஆகியவற்றின் மூலம் உணவு முதல் மருந்து பொருட்களை வாங்க முடியும்.
நீங்களும் ஆர்டர் செய்ய வேண்டுமா..? நீங்கள் விரும்பிய நிறுவனத்தில் ஆர்டர் செய்ய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
பேடிஎம் - paytmmp://sflanding?url=https://storefront.paytm.com/v2/h/ondc&title=ONDCStore&backbtn=true
Mystore - https://www.mystore.in/en/
craftsvilla - https://www.craftsvilla.com/
spice money - https://www.spicesmartshop.com/
மீஷோ - https://ondc.meesho.org/
போன்பே Pincode - https://www.pincode.com/
Magicpin - https://magicpin.in/ondc
ONDC platform-ல் இணைந்துள்ள உணவகங்கள் Paytm, Magicpin மற்றும் PhonePe செயலிகள் வாயிலாக ஆர்டர் பெற்று Shadowfax, Dunzo மற்றும் Loadshare போன்ற நிறுவனங்கள் இதை டெலிவரி செய்து வருகிறது. இந்த கட்டமைப்பில் யாரும் யாரையும் நம்பியில்லாத காரணத்தால் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்ய முடியும்.
இந்த கட்டமைப்பில் தான் மளிகை பொருட்கள் முதல் மருந்து பொருட்கள் வரையில் டெலிவரி செய்யப்பட உள்ளது, 3 முனையில் இருக்கும் நிறுவனங்களும் ONDC platform-ல் இணைந்துள்ளதன் வாயிலாக இது சாத்தியமாகிறது.


Click it and Unblock the Notifications