ட்விட்டரில் பற்பல அதிரடியான மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க், ஊழியர்கள் நீண்ட நேரம் பணிபுரியவும், அவர்கள் அலுவலகத்திலேயே உறங்கவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
மொத்தத்தில் ட்விட்டரை வாங்கிய முதல் நாளில் இருந்தே எலான் மஸ்க் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும், ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியது. இதனையடுத்து ட்விட்டரில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஊழியர்கள் அதிருப்தி
ஊழியர்கள் நிச்சயம் கடினமாக உழைக்க வேண்டும். கூடுதல் நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். விருப்பம் இல்லாவிடில் வெளியேறலாம் என எலான் மஸ்க், ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இதனை எல்லாம் கண்டுகொள்ளாத எலான் மஸ்க், தனது அடுத்தடுத்த வேலைகளை செய்து கொண்டுள்ளார் எனலாம்.

ப்ளூ டிக் ஆப்சன்
முன்னதாக ட்விட்டரால் அங்கீகரிக்கப்படும் பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் ஆப்சனுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு, அது மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வெரிபை ஆப்சன் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் புதிய ஆப்சன்
ட்விட்டரின் புதிய தலைவரான எலாம் மஸ்க் இது குறித்த அறிவிப்பினை இது வரையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும் டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த புதிய வெரிபை ஆப்சன் என்பது, இது அடுத்த வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க் ட்வீட்
ட்விட்டரின் இந்த வெரிபை ஆப்சனில் மூன்று நிறங்கள் இருக்கலாம் என்றும், இதில் தங்க நிறம் என்பது நிறுவனங்களுக்கும், சாம்பல் கலர் அரசு துறை சார்ந்த கணக்குகளுக்கும், ப்ளு டிக் என்பது தனி நபர்களுக்கும் வழங்கப்படும் என கடந்த மாத இறுதியில் ஒரு ட்வீட்டில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

எவ்வளவு கட்டணம்?
ஆரம்பத்தில் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணம் 8 டாலராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை இணைதளம் வாயிலான மாத சந்தாவாக செலுத்தினால் 7 டாலர் கட்டணமாகவும், ஆப்பிள் ஐபோன் மூலமாக செலுத்தினால் 11 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ட்விட்டர் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.