ஓரே நேரத்தில் 2 குட் நியூஸ்.. எலான் மஸ்க்-க்கு யோகம் தான்..!

எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா காரின் விற்பனையைத் துவங்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கும் வேளையில், மத்திய அரசிடம் அவர் வைக்கும் ஓரே ஒரு முக்கியமான கோரிக்கை வரிக் குறைப்பு.

இதுகுறித்து பேச டெஸ்லா அதிகாரிகள் கடந்த சில நாட்களாகப் பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. இதே வேளையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.

மத்திய அரசு - டெஸ்லா

மத்திய அரசு - டெஸ்லா

மத்திய அரசுக்கும் டெஸ்லா நிறுவன அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகத்தின் சார்பாக நித்தி அயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார், இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் தொழிற்சாலையை அமைத்து உற்பத்தி தளமாக மாற்றினால் நீங்கள் கேட்கும் வரி சலுகையைக் கட்டாயம் கொடுக்கத் தயார் என டெஸ்லா அதிகாரிகளுக்குப் பதில் அளித்துள்ளார்.

உதிரிப்பாகங்கள் போதாது

உதிரிப்பாகங்கள் போதாது

ஆனால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் பல்வேறு உதிரிப்பாகங்களைத் தயாரித்து வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் தனது உற்பத்தி தளத்திற்கு ஏற்றுமதி செய்வதாகக் கூறியது. ஆனால் இதற்கு நித்தி அயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உதிரிப்பாகங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியால் பெரிய அளவிலான வேவைவாய்ப்பு வர்த்தகத்தையும் இந்தியாவில் உருவாக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி

ஆனால் டெஸ்லா தற்போது தனது உற்பத்தி தளத்தை அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் விரிவாக்கம் செய்துள்ள நிலையில் இந்தியாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை உருவாக்க வாய்ப்பு இல்லை எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்தால் கட்டாயம் வரிச் சலுகை உண்டு என்பதை அறிவித்துள்ளது, டெஸ்லாவுக்குச் சாதகமான பதில்.

 டெஸ்லா பங்கு விலை

டெஸ்லா பங்கு விலை

இதேவேளையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் விலை வரலாற்று உச்ச அளவான 910 ரூபாய் வரையில் உயர்ந்த காரணத்தால் டெஸ்லா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 900 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

252 பில்லியன் டாலர்

252 பில்லியன் டாலர்

இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு நேற்றைய வர்த்தக முடிவில் 252 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 193 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் இருக்கும் ஜெப் பெசோஸ் அடைய முடியாத நிலைக்கு உயர்ந்துள்ளார் எலான் மஸ்க்.

2 குட் நியூஸ்

2 குட் நியூஸ்

முதலாவதாக இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்தால் கட்டாயம் கேட்கப்படும் வரி சலுகையைக் கொடுக்கத் தயார் என இந்திய அரசு கூறியுள்ளது டெஸ்லாவின் வெற்றி.

இரண்டாவதாகச் சொத்து மதிப்பு அளவீட்டில் எலான் மஸ்க் அவர்களுக்குப் பெரிய அளவில் விருப்பம் இல்லை என்றாலும் 252 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு என்பது இதுவரையில் யாரும் அடைந்திடாத ஒன்றாகவே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+