மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தா, அடுத்த நிதியாண்டிலேயே குறைந்தபட்சம் 50 முதல் 66 சதவிகித வருமான வரி செலுத்துவோர் பழைய வருமான வரி விதிப்பு முறையில் இருந்து புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
50 முதல் 66 சதவீதம் என்றால் தற்போது பழைய வருமான வரி விதிப்பு முறையைப் பயன்படுத்துவோரில் மூன்றில் 2 பங்கு மக்கள் புதிய வருமான வரி பிரிவுக்கு மாற உள்ளனர்.
மத்திய அரசு 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனி நபர் வருமான பிரிவில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் பெரும்பாலான அறிவிப்புகள் புதிய வருமான வரி விதிப்பு முறையைச் சார்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
CBDT தலைவர் நிதின் குப்தா
CBDT தலைவர் நிதின் குப்தா செய்தியாளர்களிடம் பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் பேசுகையில் புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு எத்தனை பேர் மாறுவார்கள் என்பதை வரி செலுத்துவோர் முடிவில் தான் உள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோர் எந்த வரி விதிப்பு முறையைப் பயன்படுத்தப் போகிறார் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
66 சதவீதம்
ஆனால் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் என்று நாங்கள் நினைக்கிறோம். 50-66 சதவீதம் (மூன்றில் இரண்டு பங்கு) வரி செலுத்துவோர் முதல் ஆண்டிலேயே புதிய வரி முறைக்கு மாற வாய்ப்புள்ளது நிதின் குப்தா ANI-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தள்ளுபடி வரம்பு
2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் சம்பளம் மற்றும் தனிநபர் வரி செலுத்துவோருக்கு கிடைக்கும் வருமான வரி தள்ளுபடி வரம்பை பட்ஜெட் அறிவிப்பில் தற்போது இருக்கும் 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதன் வாயிலாக இந்தப் பலனை பெற மக்கள் பழைய வருமான வரி விதிப்பு முறையில் இருந்து புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார் CBDT தலைவர் நிதின் குப்தா.
மாத சம்பளக்காரர்கள்
இந்த அறிவிப்பு மூலம் மாத சம்பளக்காரர்கள் மட்டும் அல்லாமல் சம்பளம் அல்லாமல் தொழில் செய்யும் தனிநபர்களும் இந்த வரிப் பலகை மாற்றம் மூலம் பயன்பெற உள்ளனர். மேலும் 7 லட்சம் வரையிலான வருடாந்திர வருமானம் கொண்டவர்கள் அனைவருக்கும் முழுமையாக டாக்ஸ் ரிபேட் சலுகை கிடைக்க உள்ளது.
ஜீரோ வரி விதிப்பு
இது மட்டும் அல்லாமல் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் 2.5 லட்சம் ரூபாய் வரையில் இருந்த ஜீரோ வரி விதிப்பு அளவு தற்போது புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 50000 ரூபாய்க்கு கூடுதல் வரிச் சலுகை கிடைத்துள்ளது.
இந்த உயர்வு பழைய வருமான வரி விதிப்பு முறைக்கு இல்லை.
புதிய வரிப் பலகை
புதிய வருமான விதிப்பு முறைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால், இதை மேலும் எளிதாதக்கும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் புதிய வருமான வரி விதிப்பு முறை கீழ்
0 - 300000 : 0 சதவீத வரி
300000-600000 : 5 சதவீத வரி
600000 -900000 : 10 சதவீத வரி
900000 - 1200000 : 15 சதவீத வரி
1200000 -1500000 : 20 சதவீத வரி
1500000 ரூபாய்க்கு மேல் : 30 சதவீத வரி
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications