கேரளா: பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே தயங்கி இருந்த காலத்தில் அவற்றையெல்லாம் தகர்த்து எறிந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கால் பதித்த இரண்டு பெண்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
அக்கம்மா செரியன்: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தான் அக்கம்மா செரியன் . 1909ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிறந்தவர் தான் அக்கம்மா செரியன். படிப்பில் சுட்டியான இவர் பின்னாளில் வரலாற்று ஆசிரியராக வேலைக்கு சென்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையே பின்னாளில் வரலாற்றில் இடம்பிடித்தது. மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட இவர் தன்னுடைய ஆசிரியர் பணியை துறந்து விட்டு திருவிதாங்கூர் மாநில காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார் .

1938 ஆம் ஆண்டு ஆண்டிலிருந்து அவர் நாட்டுக்கான சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்க தொடங்கினார். 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி திருவிதாங்கூர் அரசு மாளிகைக்கு வெளியே 20,000 போராட்டக்காரர்களை கொண்ட ஒரு போராட்டத்திற்கு தலைமை ஏற்று சென்றார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாக அது பார்க்கப்படுகிறது. அதற்கு தலைமை தாங்கியவர் தான் அக்கம்மா செரியன்.
அப்போது மாளிகையின் நுழைவாயிலை அடைந்தபோது அங்கிருந்த வாட்சன் என்ற ஆங்கிலேயர் துப்பாக்கியால் சுடும்படி பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது சிறிதும் அச்சப்படாமல் பாதுகாவலர்கள் முன்னே தோன்றிய அக்கம்மா செரியன், இந்த போராட்டத்திற்கு நான் தான் தலைவர், இவர்களை சுட்டுக் கொள்வதற்கு முன் நீங்கள் என்னை தான் சுட வேண்டும் என தைரியமாக கூறினார். அவருடைய இந்த தைரியத்தை கண்ட பாதுகாவலர்கள் பின்வாங்கிவிட்டனர். பின்னர் இவருடைய தீவிரமான போராட்டத்தால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் பிடித்து வைத்திருந்த பல்வேறு அரசியல் தலைவர்களை விடுவித்தது.
சுகாசினி கங்குலி: சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற மற்றொரு போராளி இவர். இந்திய சுதந்திர இயக்கத்தில் முக்கியமான நபராகவும் இவர் திகழ்ந்தார். 1909ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் தான் சுகாசினி கங்குலி . பள்ளி படிப்பை முடித்த இவருக்கு பின்னாளில் ஆசிரியர் வேலை கிடைத்தது. அவ்வாறு கொல்கத்தாவிற்கு ஆசிரியர் பணிக்கு வந்த போதுதான் அவருக்கு சுதந்திர போராட்டம் குறித்தும் போராட்டத்தில் தான் பங்கேற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.
அவ்வாறு படிப்படியாக சுதந்திர போராட்ட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்தியாவில் பெண் மாணவர்களுக்கான அமைப்பான சத்தார் சங்கத்தில் உறுப்பினரானார். அதில் பல்வேறு ஆயுத பயிற்சிகளை இவர் பெற்றார். 1930 ஆம் ஆண்டு சிட்டோகாங் பகுதியில் ஆங்கிலேயர் படைகளை வெளியேற்றுவதற்காக நடைபெற்ற போரில் முதல் ஆளாக நின்னவர் தான் சுகாசினி கங்குலி. பல ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் சிறையில் இருந்த இவர் பின்னாளில் விடுதலை செய்யப்பட்டார் . தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கங்களில் தன்னை இணைத்து கொண்டு மக்கள் பணியாற்றினார்.


Click it and Unblock the Notifications