இந்திய மருத்துவ துறையில் தனது தைரோகேர் நிறுவனத்தின் மூலம் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய வேலுமணி மும்பையில் படித்து, பணியாற்றி, மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்தாலும். இவருடைய பூர்வீகம் என்னவோ கொங்கு தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் தான்.
விவசாய குடும்பத்தில் பிறந்து பிடிப்பு மட்டுமே ஆயுதமாக கொண்டு தனக்கான ஏணிப்படிகளை தான் செதுக்கிகொண்டு 7000 கோடி ரூபாய் மதிப்பிலான தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கி பெரும் வெற்றியை கண்டுள்ளார்.

தைரோகேர் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை பார்மாஈசி நிறுவனத்திற்கு விற்பனை செய்த பின்பு டிவிட்டரில் சற்று ஆக்டிவ் ஆக உள்ளார் வேலுமணி. குறிப்பாக சமீபத்தில் மும்பை டிராபிக், கோயம்புத்தூர் உபர் டாக்சி, Charted Flight பயணம் குறித்த டிவீட் மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றுள்ளது.
வேலுமணி கோயம்புத்தூர்-க்கு சென்று திரும்பிய போது வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு உபர் கேப் புக் செய்துள்ளார். உபர் டிரைவர் கூடுதல் கட்டணத்தை கேட்டதால் கேன்சல் செய்துவிட்டேன். அதன் பின்பு ஆட்டோ ஒன்றை பிடித்தேன். ஆட்டோ ஓட்டுவது ஒரு பெண் என்பது அவர் பதிவிட்ட போட்டோ மூலம் தெரிகிறது.
இந்த ஆட்டோ பயணத்தில் வேலுமணி அவர்கள் ஓட்டுனர் பெண் உடன் பேசியுள்ளதாக டிவீட் செய்துள்ளார். ஆட்டோ உங்களுடையதா?, இல்ல சார் டிரைவர் மட்டும் தான், உங்க வீட்டுக்காரர்? வேறொரு ஆட்டோ-வை ஓட்டுகிறார். இருவரும் ஆட்டோ ஓட்டுவது அவசியமா..? என்னுடைய வருமானத்தை மட்டும் செலவு செய்வேன் கணவருடையதை சேமிப்பேன்.
எதற்காக..? சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்காக என அந்த ஆட்டோ ஓட்டுனர் பெண் தெரிவித்துள்ளார். இதற்கு வேலுமனி கடைசி வரியில் இவர் என்னுடைய தாய் மற்றும் மனைவியின் கவவை என #EmpoweredWoman ஹேஷ்டேக் போட்டு, உபர் டிரிப் கேன்சல் செய்ததிற்கு நன்றி தெரிவித்து டிவீட்டை முடித்துள்ளார்.
சமீபத்தில் வேலுமணி செய்த டிவீட் பலராலும் கவனிக்கப்பட்டது. நீங்கள் எவ்வளவு காஸ்ட்லியான கார் வைத்திருந்தாலும் மும்மையில் பயண நேரத்தை மிச்சப்படுத்த லோக்கல் டிரைன் தான் பெஸ்ட். காரில் 70 நிமிடம், ரயிலில் 18 நிமிடம் என டிவீட் செய்து தான் ரயிலில் சென்ற போட்டோ-வை பகிர்ந்தார்.

கோயம்புத்தூர் ஆட்டோ பயணத்தின் டிவீட்க்கு ரீட்டிவீட் செய்து தனது Charted Flight பயணத்தை பகிர்ந்தார் வேலுமணி. அதே வேலை, வேறு வாகனம், வேறொரு நாள். ஆனா பேச தான் முடியல..
Charted Flight-ல் முதல் முறை பயணம் என கியூட் ஆக பதிவிட்டு உள்ளார் வேலுமணி.



Click it and Unblock the Notifications