அமெரிக்காவை தளமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான "கேக்ஸ் பாடி" நிப்பிள் கவர்களை தயாரிக்கும் நிறுவனமாகும். கேக்ஸ் பாடி தனது ஊழியர்களுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை முழு மாத ஊதியத்துடன் விடுமுறை வழங்கி இருக்கிறது. இந்த அறிவிப்பை நிறுவனத்தின் நிறுவனர்களான டெய்லர் கபுவானோ மற்றும் கேசி சாராய் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
"பெண்களுக்கு உதவியாக இருக்கும் தயாரிப்பை உருவாக்க விரும்பியது மட்டுமல்லாமல் எங்களுடைய குழுவிற்கும் சிறந்த பணி கலாச்சாரத்தை உருவாக்க விரும்பினோம்", என்று கேக்ஸ் பாடி தலைமை நிர்வாக அதிகாரியான சாராய் அறிவித்துள்ளார்.

கடுமையான வேலை நேரங்களால் தங்கள் நிறுவன வாழ்க்கையை விட்டு வெளியேறிய தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இணைந்து 2022-ஆம் ஆண்டு கேக்ஸ் பாடி நிறுவனத்தைத் தொடங்கினர். கடந்த ஆண்டில், கேக்ஸ் பாடி நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 10 மில்லியன் டாலரிலிருந்து 75 மில்லியன் டாலராக அதிகரித்தது.
இந்த ஒரு மாத விடுமுறைக்காக சில மாதங்களுக்கு முன்பே கேக்ஸ் பாடி ஊழியர்கள் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். பிளாக் பிரைடே முதல் சைபர் மண்டே வரையிலான பிசியான ஷாப்பிங் சீசனில் பிற செயல்பாடுகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக ஊழியர்கள் பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.
சில ஊழியர்கள் ஒரு மாத விதிமுறையின்போது மீட்டிங் அரேஞ்ச் செய்ததாகவும் அவர்களை நிறுத்தச் சொல்ல வேண்டி இருந்ததாகவும் சாராய் தெரிவித்துள்ளார். தடையில்லா சேவையை உறுதி செய்வதற்காக வாடிக்கையாளர்களின் அர்டர்கள் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு மையங்களால் கையாளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு வேலையிலிருந்து திரும்பும் போது ஊழியர்கள் அதிக பணிச்சுமையை உணராத வகையிலும் நிறுவனர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
பொதுவாக நிறுவனங்களில் பணிபுரியும் போது அவ்வப்போது பிரேக் எடுப்பது புத்துணர்ச்சி பெற அவசியமாகும். இந்நிலையில் தற்போது கேக்ஸ் பாடி நிறுவனம் வழங்கியுள்ள இந்த விடுமுறையில் பலரும் தங்கள் தனிப்பட்ட இலக்குகளை தொடர ஒரு வாய்ப்பாக பார்க்கின்றனர். சிலர் புத்தகங்களை எழுத திட்டமிட்டுள்ளனர், மற்றவர்கள் பாட்டரி, டிவி போன்ற வெவ்வேறு தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடத் தயாராகியுள்ளனர்.
கேக்ஸ் பாடி நிறுவனத்தின் இந்த முயற்சி ஊழியர்களின் மனநலம் மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக உள்ளது. போதுமான ஓய்வு வழங்குவது நிறுவனங்கள் ஊழியர்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். நீண்ட காலத்திற்கு அதிக உற்பத்தி திறனை அடைய இது போன்ற விஷயங்களை நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications