இந்தியர்களுக்கு ஸ்பெஷல் சலுகை..!! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் 14 நாட்கள் ஜாலியா சுத்த புதிய அறிவிப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இந்திய மக்களுக்கான விசா விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. இன்று முதல், அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான விசாக்கள் அல்லது குடியுரிமை வைத்திருக்கும் இந்தியர்கள் 14 நாட்கள் வரையிலான on-Arrival விசா பெறலாம்.

இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் யுஏஇ இடையேயான ஏற்கனவே வலுவான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுஏஇயில் 35 லட்சத்திற்கும் அதிகமான இந்திய குடிமக்கள் வசிப்பதாலும், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் இந்தியர்களுக்கும் இது பெரிய அளவில் பயனளிக்கும்.

இந்தியர்களுக்கு ஸ்பெஷல் சலுகை..!! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் 14 நாட்கள் ஜாலியா சுத்த புதிய அறிவிப்பு!

முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாடு அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான குடியுரிமை வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே on-Arrival விசா அளித்து வந்தது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள புதிய கொள்கை மூலம் இந்து நாடுகளுக்கு பயணம் செய்ய விசா வைத்திருந்தாலே போதும் இந்தியர்கள் 14 நாட்கள் வரையிலான on-Arrival விசா பெறலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாடு கொண்டு வந்த இந்த புதிய விசா விதிமுறை தளர்வு இரண்டு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா மற்றும் வணிகப் பயணத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக யுஏஇ வழியாக அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பயணிக்கும் பல இந்திய பயணிகள் இப்போது UAE நாட்டில் சில நாட்கள் தங்கியிருந்து சுற்றுலா செல்ல ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

யுஏஇ அதிகாரிகள் விசா-ஆன்-அரைவல் அதிகபட்சம் 14 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும், கூடுதல் கட்டணத்துடன் 60 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த கால நீட்டிப்பு பெற இந்திய குடிமக்கள் குறைந்தபட்சம் ஆறு மாத செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடுகள் எப்படி உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகளை கவர வேண்டும் என்பதற்காக schengen visa என்ற முறையை கொண்டு வந்துள்ளதோ அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாடுகளும் சுற்றுலா துறையின் வாயிலாக பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்த பல புதிய விசா தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.

schengen visa போலவே வளைகுடா நாடுகளும் புதிய விசாவை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் GCC Grand Tours visa என்ற புதிய விசாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த விசா மூலம் ஒருவர் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய அனைத்து நாடுகளுக்கும் செல்ல முடியும்.

Schengen visa என்பது ஐரோப்பியர் அல்லாத நாட்டினர் 90 நாடுகளுக்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம், குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்லோவெனியா, போர்ச்சுகல் , ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எவ்விதமான தடையுமின்றி பயணிக்க முடியும்.

இதேபோல் தான் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாடு துபாய், அபுதாபி என தனித்தனியாக விசா தளர்வுகளை அளிக்காமல் மொத்தமாக அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா மற்றும் புஜைரா என அனைத்து நாடுகளுக்கும் இந்த விசா தளர்வை அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+