துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டு ராணுவ நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் ஈரானில் சுமார் 1000 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். குறிப்பாக ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். இதனை அடுத்து பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ராணுவம் துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீதும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் ஐக்கிய அரபு அமீரக அரசு தங்கள் நாட்டில் வசிக்கக் கூடிய மக்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிப்பதால் இந்த எச்சரிக்கையை பின்பற்றி நடப்பது நல்லது இல்லை என்றால் அரசின் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஆளாக கூட நேரிடலாம்.

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: அரசு கடும் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரான் தாக்குதலின் போது உங்களுக்கு எமர்ஜென்சி அலர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. மொபைல் நோட்டிஃபிகேஷன் மற்றும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த எமர்ஜென்சி அலர்ட்டுகளை வழங்குகிறோம். ஆனால் சிலர் எச்சரிக்கைகள் வந்தவுடன் தங்களுடைய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தாக்குதலை புகைப்படம் எடுப்பதிலும் வீடியோ எடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர் என சுட்டிக்காட்டி இருக்கிறது.

Also Read

இவ்வாறு எச்சரிக்கை வரும்போது அரசின் வழிமுறைகளை பின் தொடரவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறது. ஈரான் டிரோன் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே துபாய் , அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு மொபைல் போன்கள் மூலம் எச்சரிக்கை நோட்டிபிகேஷன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் இவ்வாறு நோட்டிபிகேஷன் வந்த உடனே வந்தவுடன் ஏராளமான குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர், சிலர் தங்களுடைய வாகனங்களை எடுத்து கொண்டும் தாக்குதல் நடப்பதாக தகவல் கிடைத்த இடத்திற்கு சென்று வீடியோ எடுக்கிறார்களாம்.

தாக்குதல்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பொது மக்களுக்கு இந்த அலர்ட்டுகளை வழங்குவதன் முக்கிய நோக்கமே அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் வெளியே வரக்கூடாது அப்படி வெளியே வருவது ஆபத்து என்பதற்காக தான். ஆனால் பலரும் இதனை வீடியோ எடுப்பதற்கும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல என கூறியது அரசு கூறி இருக்கிறது.

Recommended For You

நீங்கள் ஒரு இடத்தில் இருக்கிறீர்கள் அப்போது எமர்ஜென்சி அலார்ட் வருகிறது என்றால் உடனடியாக நீங்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் அல்லது மூடப்பட்ட அறைகளுக்குள் சென்று விட வேண்டும் அல்லது வீடுகளுக்குள்ளேயே தங்கிவிட வேண்டும். All Clear என்ற மெசேஜ் கிடைக்கும் வரை அந்த இடத்திலிருந்து வெளியே வரக்கூடாது என அரசு குறிப்பிட்டு இருக்கிறது.உங்களுடைய பாதுகாப்புக்காக தான் இந்த எச்சரிக்கையை வழங்குகிறோம் இதனை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் தவறினால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடலாம் என எச்சரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+