ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்திய மக்களுக்கான விசா-ஆன்-அரைவல் கட்டுப்பாடுகளை தளர்த்தி இக்கொள்கையை விரிவாக்கம் செய்துள்ளது. 2025 பிப்ரவரி 13 முதல் சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய ஆறு நாடுகளில் இருந்து விசாக்கள், குடியேற்ற அனுமதிகள் அல்லது கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்களுக்கு UAE வந்தவுடன் விசாவைப் எளிதாக பெறலாம்.
இது ஏற்கனவே இருந்த முறை என்றாலும், தற்போது அதிகப்படியான நாடுகள் சேர்க்கப்பட்டு உள்ளது. எதற்காக இத்தகைய விசா கொடுக்கப்படுகிறது என்றால், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பெரும்பாலானோர் UAE நாடுகள் வழியாகவே பயணம் செய்கின்றனர்.

அப்படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலான மக்கள் UAE-யில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா, புஜைரா என ஏதேனும் ஒரு நாட்டில் விமானத்தை மாற்றுகின்றனர். இப்படி விமானம் மாற்றும் மக்களுக்கு இந்த நாடுகள் ஒரு சுற்றுலா தளமாகவும், பிஸ்னஸ் மீட்டிங் தளமாக மாறுகிறது.
அதாவது குடும்பத்துடன் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோர் துபாயில் லோஓவர் நேரத்தில் அல்லது 1-2 நாள் துபாயில் செலவழித்து, ஷாப்பிங் செய்துவிட்டு செல்வது அதிகரித்து வருகிறது. இது ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு முக்கிய சுற்றுலா, ஹோட்டல், ஷாப்பிங் வருவாய் ஈட்டும் தளமாக மாறியுள்ளது.
இதேபோல் இந்த சலுகையை பல இந்தியர்கள் வேலைவாய்ப்பு தேடவும், புதிய முதலீடுகளை செய்யவும், நண்பர்களை சந்திக்கவும் என பல வழிகளில் பயன்படுத்துகின்றனர்.
இதை ஊக்குவிக்கும் வகையில் UAE அரசு முன்பு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய 3 நாடுகளில் இருந்து விசா வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அளித்துவந்த இந்த ஆன்-அரைவல் விசா தற்போது கூடுதலாக 6 நாடுகளுக்கு அளித்துள்ளது. இது இந்தியார்களுக்கும், பிற தெற்காசிய நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்கும்.
UAE நாட்டின் அடையாளம், குடியுரிமை, சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) இந்த விரிவாக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்தியா மற்றும் UAE இடையிலான பயணம் மற்றும் வணிகத் மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
விசா-ஆன்-அரைவல் பெற அடிப்படை தகுதி என்றால் இந்தியப் பயணிகள் UAE இல் நுழைந்த தேதியிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டைக் வைத்திருக்க வேண்டும்.இந்த விசா பெற கட்டணம் உள்ளது, 100 திராஹாம்-க்கு 14 நாள் விசா கிடைக்கும், Dh250 கட்டணம் செலுத்தி மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கலாம். இதேபோல் நீண்ட காலம் தங்க வேண்டும் என்றால் Dh250க்கு 60 நாள் விசா பெற முடியும். 1 திராஹம்-ன் இன்றைய மதிப்பு 23.62 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications