இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்திய ஊழியர்கள் அதிகம் பணியாற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஜூன் 14 வரையில் இந்தியப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல்25 ஆம் தேதி முதல் இந்தியப் பயணிகளுக்குத் தடை விதித்துள்ள ஐக்கிய அரபு நாடுகள், தற்போது மீண்டும் ஜூன் 14 வரையில் இத்தடையை நீட்டித்துள்ளது. இதேபோல் இந்தியாவில் கடந்த 14 நாட்களில் டிரான்சிட் ஆன பயணிகளுக்கு ஐக்கிய அரபு நாடுகளுக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது.

இதேபோல் ஐக்கிய அரபு நாடுகள் குடிமக்கள், UAE கோல்டன் விசா வைத்துள்ளவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் தடைகள் இல்லாமல் ஐக்கிய அரபு நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்குச் செல்லும் பயணிகள் எவ்விதமான தடையுமின்றி அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்தத் தடை உத்தரவால் ஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்று இந்திய ஊழியர்கள் அவசர காரணமாக இந்தியா வந்தால் திரும்பி வேலையில் சேர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பல ஆயிரம் இந்திய ஊழியர்கள் பணியில் சேர முடியாமல் இந்தியாவிலேயே உள்ளனர்.


Click it and Unblock the Notifications