ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசு, கோல்டன் விசா (Golden Visa) திட்டத்தில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை இந்த விசா திட்டத்தில் சேர இந்தியர்கள் குறைந்தபட்சம் AED 20 லட்சம் (அதாவது சுமார் ரூ.4.66 கோடி) மதிப்புள்ள சொத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், இப்போது ஒரு "நியமன அடிப்படையிலான (Nomination-Based) Golden Visa" முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஒருவர் எந்த சொத்திலும் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை AED 1,00,000 (சுமார் ரூ.23.3 லட்சம்) கட்டணம் செலுத்தினாலே வாழ்நாள் குடியிருப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் தொழில்முறை திறமை, சமூக பங்களிப்பு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வளர்ச்சிக்கு ஏற்புடைய வாய்ப்புகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். புதிய முறைப்படி, இந்த திட்டம் தகுதியான தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்குவோருக்கானதாகும். தகுதியை மதிப்பீடு செய்து அரசு தேர்வு செய்கிறது.

UAE அரசு அறிமுகப்படுத்தியுள்ள Golden Visa திட்டத்தின் பைலட் (Pilot) பருவம் தற்போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கானதாக துவங்கியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், முதல் மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவில் Golden Visa திட்டத்தின் பைலட் பருவத்தை நடத்துவதற்கு, Rayad Group என்ற ஆலோசனைக் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம், இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள VFS மற்றும் One Vasco மையங்களுடன் இணைந்து, விண்ணப்ப செயல்முறையை முன்னெடுக்கிறது. மேலும், விண்ணப்பதாரர்கள், Rayad Group-இன் ஆன்லைன் போர்டல் மற்றும் கால் சென்டர் வழியாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இதுதொடர்பாக Rayad Group-இன் மேலாளர் இயக்குநர் ரெயத் கமால் அயூப் கூறுகையில், "இந்தியர்களுக்கு இது ஒரு பொன் வாய்ப்பு" என்று தெரிவித்துள்ளார். மேலும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, குற்றப் பின்னணி, சமூக ஊடக கண்காணிப்பு போன்றவை இருக்கும். இவை அனைத்தையும் கடந்து, இறுதி நியமன முடிவு UAE அரசாங்க அதிகாரிகளிடம் இருக்கும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் Golden Visa உரிமையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்தியாவில் இருந்தோ அல்லது பிற நாடுகளில் இருந்தோ UAE-க்கு அழைத்து வரலாம். மேலும், அவர்கள் பணியாளர்களை வேலைக்கு நியமிக்கலாம். அதேபோல், அவர்கள் வணிகம் தொடங்கவோ அல்லது தொழில்முறை பணிகளில் ஈடுபடவோ முழுமையாக அனுமதி வழங்கப்படும். பழைய சொத்துகள் குத்தகை அல்லது முதலீட்டு விசாக்கள் சொத்து விற்றவுடன் காலாவதியாகும். ஆனால், Golden Visa-வில் இது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.
கடந்த 2022ஆம் ஆண்டு கையெழுத்தான முழுமையான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் மூலம் (CEPA), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இந்தியா இடையேயான பொருளாதாரம் மற்றும் உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளன. இந்த புதிய நியமன அடிப்படையிலான Golden Visa திட்டமும், இந்த CEPA உடன் ஏற்படும் வளர்ச்சியின் விளைவாகவே பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் எதிர்காலத்தில் CEPA-இன் மற்ற பங்குதாரர் நாடுகளுக்கு, குறிப்பாக சீனா போன்ற நாடுகளுக்காகவும் விரிவடைய வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications