துபாய்: சர்வதேச அளவில் புவி வெப்பமயமாதல் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. உலக நாடுகள் கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டும் என வல்லுனர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பாடுபடும் நபர்களுக்கு பிரத்தியேக விசா வழங்கும் நடைமுறையை ஐக்கிய அரபு அமீரகம் கொண்டு வந்துள்ளது.
இதற்கு ப்ளூ விசா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின் மாநாட்டில் இந்த ப்ளூ விசா சிஸ்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிப்பு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு ப்ளூ விசா வழங்கப்படும் என்றும் அவர்கள் பத்தாண்டு காலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்குவதற்கான உரிமத்தை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துபாயில் உலக அரசுகளின் மாநாடு 2025 நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது தான் இந்த விசா குறித்து அறிவிப்பை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டது. முதல் கட்டமாக சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக பாடுபடும் 20 பேருக்கு ப்ளூ விசா வழங்கப்பட இருக்கிறது.
தனி நபர்கள், சர்வதேச அரசு சாரா அமைப்புகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த ப்ளூ விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐக்கிய அமீரக அரசு கோல்டன் விசா மற்றும் கிரீன் விசா என சிறப்பு விசாக்களை வழங்கி வருகிறது. அத்துடன் ப்ளூ விசாவும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை குறிப்பிடும் வகையிலேயே இந்த விசா நடைமுறையை கொண்டு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிபி என்ற தங்களுடைய அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக ப்ளூ விசா பெறுவதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் உலக மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தர பாடுபடும் நபர்களை கௌரவிக்கும் விதமாகவே இப்படி ஒரு விசாவை அறிமுகம் செய்திருக்கிறோம் என ஐக்கிய அரபு அமீரகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ICP என்ற இணையதளம் வாயிலாக தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பம் மேற்கொள்ளலாம், அதில் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட தங்களின் பங்களிப்புகள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து விசாக்களை வழங்கும் என அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 20 பேருக்கு ப்ளூ விசா வழங்கப்பட உள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

துபாயில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு; ஈரான் போர் நீடிப்பதால் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

சவுதி, UAE, கத்தார்-க்கு வார்னிங் கொடுத்த ஈரான்.. இஸ்ரேல் செய்த வேலையால் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications