ஈரான் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. ஈரான் தொடர்ச்சியாக தன்னுடைய அண்டை நாடுகளின் மீது இது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி பதில் தாக்குதல் நடத்திய வண்ணம் இருக்கிறது.
சவுதி, துபாய் ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், புகழ்பெற்ற கட்டிடங்கள் , அமெரிக்க தூதரகங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்துகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ஈரான் வீசக்கூடிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை அழித்து மக்களுக்கு பாதுகாப்பு தந்து வருகிறது. ஈரான் தாக்குதல் நடத்தினாலும் பொது மக்களுக்கோ மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கோ எந்த பாதிப்பும் இல்லாத வகையில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

தாக்குதல் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஈரோனின் தாக்குதல்களை வீடியோ எடுப்பது புகைப்படம் எடுப்பது , தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிடுவது , ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் சிதறி கிடப்பதை நேரில் சென்று பார்ப்பது, வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரக மக்கள் ஈரான் போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளைய தினம் ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல பஹ்ரைன், கத்தார் குவைத் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் மார்ச் 20 ஆம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த போருக்கு மத்தியில் இந்த பகுதிகளில் வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டிய சூழல் உண்டாகியிருக்கிறது. இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரக அரசு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திறந்த வெளியிடங்களில் தொழுகை நடத்த தடை விதித்துள்ளது.
ஈரான் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனவே ரம்ஜான் பண்டிகையின் போது திறந்தவெளி இடங்களில் தொழுகையில் ஈடுபடக்கூடாது என்றும் மசூதிகளுக்கு உள்ளே மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. துபாய் , அபுதாபி என அனைத்து பகுதிகளிலும் இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பாரம்பரியமாக தொழுகை நடைபெறும் இடங்களில் கூட இந்த ஆண்டு தொழுகை நடைபெறாது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகை என்றாலே துபாயில் களைக்கட்டும் பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகை நடத்துவார்கள். ஈரான் தாக்குதல் நீடிப்பதால் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது அரசு. எனவே துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் ரம்ஜான் பண்டிகை ஒட்டி திறந்த வெளியிடங்களில் தொழுகையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications