ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சில்லறை வர்த்தக குழுமமான லுலு குழுமம், குஜராத்தில் உள்ள அகமதாபாத் அருகே ஷாப்பிங் மால் ஒன்றை தொடங்க, 2,000 கோடி ரூபாய் முதலீட்டினை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, இந்த நிறுவனம் முதலீட்டினை மேற்கொள்ளும்.
இது குறித்து லுலு குழுமம் குஜராத் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிரம்மாண்ட ஷாப்பிங் மால்
ஏற்கனவே லுலு குழுமம் மூன்று மால்களை இந்தியாவில் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இன்னும் இரண்டு மால்களை தொடங்கவுள்ளது. இதற்கிடையில் தான் குஜராத்தில் ஒரு பிரம்மாண்டமான மாடர்ன் ஷாப்பிங் மாலை தொடங்க லுலு குழுமம் 2,000 கோடி ரூபாய் முதலீட்டினை செய்யவுள்ளது.
யார் யாருக்கு இடையே ஒப்பந்தம்
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் லுலு குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான யூசுப் அலி துபாயில் நடந்த சந்திப்பின்போது இந்த முதலீட்டு திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.
குஜராத் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், அகமதாபாத் மற்றும் காந்தி நகர் இடையே 5,000-க்கும் மேற்பட்ட வேலைகளை இந்த திட்டம் உருவாக்கும். இந்த மாலுக்கான கட்டுமான நடவடிக்கையானது 2022ல் தொடங்கி 30 மாதங்களில் நிறைவு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
குஜராத் அரசு லுலு குழுமத்திற்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் அனுமதிகளுடன் வசதிகளையும் வழங்கும். மேலும் இது குறித்த நடவடிக்கைகளை கவனிக்க ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியையும் நியமிக்கும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடரும் முதலீடு
இந்த மால் தவிர, லுலு குழுமம், உணவு பதப்படுத்துதல் மற்றும் லாகிஸ்டிக்ஸ் மையங்களையும் பரோடா மற்றும் சூரத்தில் அமைக்கவுள்ளது.
குஜராத்தில் முதலீடு செய்யவுள்ள அலியின் வாக்குறுதியை நான் வரவேற்கிறேன். இந்த குழுமத்திற்கு நிலம் மற்றும் தேவையான வசதிகளை செய்ய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இதனால் அவர்கள் எளிதில் தொடங்க முடியும் என குஜராத் முதல்வர் கூறியுள்ளார்.
குஜராத் பிடித்தமான இடம்
இதே அலி குஜராத்தில் முதலீடு செய்வது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என் இதயத்தில் சிறந்த இடத்தினை பிடித்துள்ளது. எனது தந்தைக்கு அகமதாபாத்தில் குடும்ப வணிகம் இருந்ததால் வணிகத்தில், வணிகத்தின் அடிப்படைகளை நான் முதலில் கற்றுக் கொண்டது இங்கு தான். ஆக இங்கு முதலீடு செய்வதில் நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications