ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியிலான தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் பள்ளிகள் மூடப்பட்டு, மார்ச் 2 முதல் 4 வரை ஆன்லைன் வாயிலாக பள்ளிகள் இயங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது UAE-யில் பெரும் மாற்றமாக கருதப்படுகிறது.

பங்குச் சந்தைகள் மூடல் - பொருளாதார அதிர்ச்சி
UAE-யின் இரு முக்கிய பங்குச் சந்தைகளான அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் (ADX) மற்றும் துபாய் பைனான்ஷியல் மார்க்கெட் (DFM) மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மூடப்பட்டுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நடவடிக்கையாகும்.
UAE கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆணையம், இந்த முடிவு சமீபத்திய நிகழ்வுகளின் தாக்கத்தின் எதிரொலியாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவம் அமெரிக்க படைகளை தாக்க வேண்டும் என்பதற்காக UAE-யில் இருக்கும் அமெரிக்க தளங்களை தாக்க முடிவு செய்து டிரோன், ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் பல UAE மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்தது.
இந்த பங்குச் சந்தைகள் மூலம் கல்ஃப் பகுதி பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
TCS மற்றும் இன்ஃபோசிஸ் பயண எச்சரிக்கை
இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களான TCS மற்றும் இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன. ஊழியர்களின் பாதுகாப்பு முதன்மையானது என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. HR குழுக்கள் ஊழியர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
தமிழ்நாட்டு IT ஊழியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அச்சம்
தமிழ்நாட்டில் இருந்து UAE, கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகளில் பணியாற்றும் IT ஊழியர்கள் பலர் உள்ளனர். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள குடும்பங்கள் தற்போதை நிலையை கண்டு பதற்றத்தில் உள்ளனர்.
டிரம்ப் தாக்குதல் திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் ஈரான் மீதான ராணுவ தாக்குதலை தேவைப்பட்டால் "நான்கு முதல் ஐந்து வாரங்கள்" தொடர்ந்து நடத்துவோம். இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதலின் தீவிரத்தை எளிதாக தக்கவைக்க முடியும் என்று உறுதியாக தெரிவித்தார். அதேநேரம், அமெரிக்க வீரர்களுக்கு மேலும் உயிரிழப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், ஈரானில் புதிய அரசு எப்படி அமையும் என்று பல முரண்பாடான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஈரான் ஆட்சி மாற்றம் நடக்குமா அல்லது தற்போதைய அதிகார அமைப்பே தொடருமா என்பது குறித்து தெளிவாக கூறாமல், பல்வேறு சாத்தியக்கூறுகளை பேசியுள்ளார்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications