கச்சா எண்ணெய் சார்ந்து இருக்கும் அனைத்து நாடுகளும் மாற்று வர்த்தகம் மற்றும் வருமானம் ஈட்டும் வழிகளைப் பார்த்து வருகிறது.
இதில் முன்னோடியாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகள் ஏற்கனவே பார்மா முதல் முதலீட்டு நிறுவனங்கள் வரையில் பல துறையைச் சார்ந்த நிறுவனங்கள் ஈர்த்து வரும் நிலையில் தற்போது டெக் துறை நிறுவனங்கள் மீது கவனத்தைத் திருப்பியுள்ளது.
இதற்காக ஐக்கிய அரபு நாடுகள் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, இது ஐடி துறை நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் பாஸ்ட் டிராக் பிஸ்னஸ் லைசென்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட காலம் குடியுரிமை வழங்குவதன் மூலம் ஆசியா, ஐரோப்பாவில் இருக்கும் டெக் நிறுவனங்களை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது. பொதுவாக ஐக்கிய அரபு நாடுகள் ஒரு துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் எந்த அளவிற்கும் இறங்க தயாராக இருக்கும், இதற்கான உதாரணம் ரியல் எஸ்டேட்.
டிஜிட்டல் நிறுவனங்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் ஜூலையில் அறிமுகம் செய்த திட்டம் மூலம் சுமார் 300க்கும் அதிகமான டிஜிட்டல் நிறுவனங்களை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது. இலக்கில் 40 சதவீத நிறுவனங்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் அலுவலகத்தைத் துவங்குவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
விசா மற்றும் முதலீட்டுக் கொள்கை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை வேகமாகத் தளர்த்தியதன் வாயிலாகவும், விசா மற்றும் முதலீட்டு கொள்கைகளைத் தளர்த்திய நிலையில் வங்கி அதிகாரிகள், கமாடிட்டி வர்த்தகர்கள் மற்றும் ஹெட்ஜ் பண்ட் மேனேஜர்களை அதிகளவில் ஈர்த்துள்ளது. இதன் எதிரொலியாகத் துபாய் ரியல் எஸ்டேட் விலைகள் 12 மாதத்தில் 70 சதவீதம் வரையில் உயர்ந்தது.
நிதி நிறுவனங்கள்
சர்வதேச நிதி நிறுவனங்கள் பல தங்களது மத்திய கிழக்கு வர்த்தகத்தின் தலைமை அலுவலகத்தை இதன் மூலம் துபாய் மற்றும் அபுதாபியில் அமைத்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்குப் போட்டியாகச் சவுதி அரேபியாவும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
10 வருடம் கோல்டன் விசா
இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் அலுவலகம் அமைக்க வரும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு வேகமாகத் தொழில் துவங்குவதற்கான உரிமம், ஊழியர்களுக்கு 10 வருடம் கோல்டன் விசா, தங்குவதற்கான இடம், பிள்ளைகளுக்கான பள்ளி வரையில் சேவை அளிக்கத் தயாராக உள்ளது.
இந்தியர்களுக்கு ஜாக்பாட்
இது வெளிநாடுகளுக்குச் செல்ல தயாராக இருக்கும் இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழ்நாடு, கேரள டெக் வல்லுனர்களுக்கு இது ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் தற்போது டெக் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications