ஐக்கிய அரபு எமிரேட் புதிய குடியேற்ற கொள்கையை அறிவித்துள்ள நிலையில், இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 3 முதல் அதாவது இன்று முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் புதிய குடியேற்ற கொள்கை அமலுக்கு வந்துள்ளது.
இந்த புதிய குடியேற்ற கொள்கை குறித்தும், இதனால் யாருக்கு அதிக லாபம் என்பதையும் தற்போது பார்ப்போம்.
ஐக்கிய அரபு எமிரேட்
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்குச் செல்லும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ள வகையில் புதிய விசா விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மல்டிபிள்-என்ட்ரி விசிட் விசா என்று கூறப்படும் விசா வெளிநாடுகளில் படிப்பை தொடங்கும் என்ஆர்ஐ மாணவர்களுக்கு அனுகூலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய குடியேற்ற விதைகளின் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நீண்ட காலம் தங்குவதற்கு அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோல்டன் விசா திட்டம்
ஏற்கனவே கோல்டன் விசா திட்டம் 10 ஆண்டுகள் வரை ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கின்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 5 ஆண்டுகள் தங்கும் பசுமை விசா திட்டம் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு புதிய நுழைவு அனுமதி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள்
இந்த புதிய விசா கொள்கையின்படி சுற்றுலா பயணிகளை 90 நாட்கள் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தங்க அனுமதிக்கிறது. அதேபோல் ஐந்தாண்டு பசுமை விசா திட்டம் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு சாதகமாக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு மனிதவளம் அதிகம் தேவைப்படுவதால் இந்த புதிய விசா கொள்கை திட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பட்டம் பெற்ற இளைஞர்கள்
உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வேலை ஆய்வு விசா பெறுவதற்கு ஸ்பான்சர்கள் தேவையில்லை. உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் புதிதாகப் பட்டம் பெற்றவர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும்.
முதலீட்டாளர்களை ஈர்க்கும்
இந்த புதிய குடியேற்ற கொள்கை துபாயில் உள்ள ஏடிசி குழுமத்தின் எம்டி சலாஹுதீன் அவர்கள் கூறியதாவது: 'இதுபோன்ற புதிய விசா கொள்கைகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்றும், சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க வணிகர்களை ஊக்குவிக்கும் என்று கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications