நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, அடிக்கடி விலையேற்றம் காணும் கேஸ் விலை, இப்படி விலையேற்றம் கண்டும வரும் பொருட்களின் பட்டியல் மிகப்பெரியது. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா? சாமானிய மக்களை பதம் பார்க்கும் விலை வாசியை குறைக்க அரசு என்ன செய்யப் போகிறது என்ற பல கேள்விகள் எழுந்தன. ஏன் இன்று நாடு முழுவதும் நடந்து கொண்டுள்ள பாரத் பந்தில் இதுவும் ஒரு முக்கிய கோரிக்கையாகவே உள்ளது.
இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் மக்களுக்கு இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் சில்லென ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அப்படி என்ன அறிவிப்பு? இதனால் என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம்.
கட்டுக்குள் உள்ளது?
தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை, சமையல் எண்ணெய், உரங்கள் என பலவற்றின் விலை சர்வதேச அளவில் மிகப்பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை,. கட்டுக்குள் உள்ளது என மத்திய அமைச்ச பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வரியை குறைக்கலாம்
இதற்கிடையில் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் ப்ரீ டிரேட் அக்ரிமென்ட் (free trade agreement)ன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் இருந்து பேரிட்சை, உலோகங்கள், சிமெண்ட், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவற்றின் மீதான வரியை இந்தியா குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
வர்த்தக ஒப்பந்தம்
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயலின் ஐக்கிய எமிரேட்ஸ் பயணத்தின்போது,போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 1157 பொருட்களுக்கு அல்லது 9.7% தவிர மற்ற பொருட்களுக்கு வரியை குறைக்கும். அதே நேரம் UAE 0.7% பொருட்களை வர்த்தகத்தில் இருந்து விலக்கு காட்டியுள்ளதாகவும் ஒப்பந்தத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கட்டணங்கள் குறையலாம்
மே மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், இந்தியா, இறக்குமதி செய்யப்படும் மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி பொருட்களுக்கு வரியை குறைகக் விரும்புகிறது. மாறாக வர்த்தக பங்குதாரர்கள் 80%-க்கும் அதிகமான பொருட்களின் கட்டணங்களை குறைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பயன்
இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மத்தியில் இதன் மூலம் இந்திய சந்தையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, வேளாண்மை, ரத்தினம் மற்றும் ஆபரணங்கள், மீன், காலணிகள், விளையாட்டு சாதனங்கள், பார்மா பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த 6000-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியின்றி இந்திய வர்த்தகர்கள் ஏற்றுமதி செய்யலாம்.
வரி விலக்கு
இந்தியாவில் இருந்து தற்போது சுமார் 2 லட்சம் கோடி மதிப்புள்ள சரக்குகள் UAE-க்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆக மேற்கொண்ட கூட்டு ஒப்பந்தம் அமலுக்கு வரும்போது இவற்றில் 90% பொருட்களுக்கு வரி இருக்காது. இதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மேலும் வணிகத்தினை மேம்படுத்த முடியும். மேலும் எஞ்சியிருக்கும் 9.5% மேலான பொருட்களுக்கு அடுத்த 5-10 ஆண்டுகளில் வரி விலக்கு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதிக்கும் வரி விலக்கு
இதேபோல இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியம் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல்கள், உலோகங்கள், தாதுக்கள் உள்ளிட்ட பலவற்றிற்கும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 7694 பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். அடுத்த 5 - 10 ஆண்டுகளில் சுமார் 2400 பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
வேலை வாய்ப்பு பெருகும்
மொத்தத்தில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் மத்தியில், இது இரு நாட்டின் உற்பத்தியினை மேம்படுத்த வழிவகுக்கும். அதோடு இதனால் வேலை வாய்ப்புகளும் பெருகும். மொத்தத்தில் இதனால் விலை வாசியும் சற்று கட்டுக்குள் வரலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications