டெல்லி தான் டாப்பு.. 11 பில்லியன் நிமிடமாம்..!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான நகரங்களில் ஆன்லைன் புக்கிங் மூலம் டாக்சி சேவை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் அதிகளவில் இத்துறையில் சேவை அளித்து வருகிறது.

அந்த வகையில் உலகின் முன்னணி ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான உபர் 2022 ஆம் ஆண்டில் தனது மொத்த வர்த்தகத்தையும் கலக்கலான ரிப்போர்ட் ஆக வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் உபர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கிறது ஓலா நிறுவனம்.

ஆனாலும் பல நகரங்களில் , பல வாடிக்கையாளர்கள் மத்தியில் உபர் முக்கிய மற்றும் நிரந்தர சேவை தளமாக உள்ளது.

உபர் 2022 ரிப்போர்ட்

உபர் 2022 ரிப்போர்ட்

ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான உபர் 2022 ஆம் ஆண்டில் மட்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் சுமார் 11 பில்லியன் நிமிடங்கள் வரையில் சேவை அளித்துள்ளது. அதாவது உபர் நிறுவன தளத்தில் இருக்கும் கார்கள் தனது வாடிக்கையாளற்களை சுமார் 11 பில்லியன் நிமிடம் பயணம் செய்ய பயன்படுத்தப்பட்டு உள்ளது.

 மாலை 5 - 6 மணி

மாலை 5 - 6 மணி

இதேபோல் உபர் நிறுவனத்திற்கு ஒரு நாளில் அதிகப்படியான வர்த்தகம் கிடைப்பது மாலை 5 - 6 மணி காலக்கட்டத்தில் அதிகப்படியான வர்த்தகத்தை பெற்று வருகிறது. அதாவது ஒரு நாளில் சராசரியாக அதிக வர்த்தகத்தை பெறும் நேரமாக மாலை 5 - 6 மணி வரையிலான காலக்கட்டம் உள்ளது. இதேபோல் வாரத்தில் பிற நாட்களை காட்டிலும் சனிக்கிழமை அதிகப்படியான வர்த்தகத்தை பெற்று வருகிறது உபர்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்று குறைந்து, பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு துவங்கிய காரணத்தால் வீட்டிலேயே முடங்கியிருந்த மக்கள் அதிகளவில் வெளியே செல்ல விருப்பம் கொண்டனர், இதனால் உபர் 2022ஆம் ஆண்டு துவக்கம் முதல் அதிகப்படியான வர்த்தகத்தை பெற துவங்கியது, இதனால் சுமார் 4.5 பில்லியன் கிலோமீட்டர்-க்கு உபர் டாக்சிகள் சேவை அளித்துள்ளது.

பயண தூரம்

பயண தூரம்

4.5 பில்லியன் கிலோமீட்டர் என்பது சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமான நெப்டியூன் - பூமி வரையிலான தூரமாகும். இதேபோல் இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் தேவை உபர் கோ, உபர் ஆட்டோ ஆகியவை தான். சமீபத்தில் பெங்களூரில் ஆட்டோ சேவைக்கு அதிகப்படியான கட்டணங்களை வாங்கப்படுவதாக குற்றம்சாட்டப்ட்ட நிலையில் சில நாட்களுக்கு சேவை முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நகரம்

முக்கிய நகரம்


2022 ஆம் ஆண்டில் அதிக உபர் யூசர்ஸ் கொண்ட நகரங்களில் டெல்லி-என்சிஆர், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகியவை உள்ளது. 2022 இல் மும்பையிலிருந்து புனே, மும்பை முதல் நாசிக், டெல்லி முதல் ஆக்ரா, ஜெய்ப்பூர் முதல் சண்டிகர், மற்றும் லக்னோ முதல் கான்பூர் ஆகியவை intercity routes பிரிவில் முன்னோடியாக இருக்கும் ஐந்து வழித்தடங்களாகும்.

 உபர்

உபர்

இந்த ஆண்டு, உபர் பல புதிய நகரங்களுக்கு தனது சேவையை விரிவாக்கம் செய்தது. ஏழு வடகிழக்கு மாநிலங்களிலும் தற்போது உபர் சேவை உள்ளது. இதேபோல் Uber இப்போது இந்தியாவில் 123 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+