பெங்களூரு: இந்தியாவில் பெரு நகரங்களில் எல்லாம் ஊபர், ஓலா, ரேபிடோ செயலிகளின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக மாறி இருக்கிறது . பொது போக்குவரத்தை பயன்படுத்த விரும்பாத பலரும் சௌகரியமான பயணத்தை மேற்கொள்வதற்காக இது போன்ற செயலிகள் மூலமாக ஆட்டோ ,டாக்ஸி மற்றும் பைக் டாக்ஸி உள்ளிட்டவற்றை புக் செய்து பயணம் செய்கின்றனர் .
ஊபரில் ஆட்டோ பதிவு: அதிக டிமாண்ட் இருக்கும்போது இந்த செயலிகள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணங்களையே காட்டும், குறிப்பாக மழை காலங்களில் சொல்லவே வேண்டாம். அப்படி பெங்களூருவில் மழை பெய்ததால் ஆட்டோவில் செல்லலாம் என ஊபரில் ஆட்டோ ரைட் பதிவு செய்தவர் அதன் கட்டணத்தை பார்த்து அதிர்ந்து போய்விட்டாராம். இனி ஆட்டோவே வேண்டாம் என நடந்தே சென்றுவிட்டாராம்.

1 கிமீ-க்கு இவ்வளவு கட்டணமா?: ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில், நேற்று இரவு பெங்களூருவில் எங்கள் பகுதியில் மழை பெய்தது . அப்பொழுது என்னுடைய நண்பர் ஊபரின் ஆட்டோ முன்பதிவு செய்தார் அப்போது அதில் காட்டிய கட்டணத்தை பார்த்து அதிர்ந்து போன அவர் ஒரு குடையை வாங்கிக் கொண்டு நடந்தே வீட்டுக்கு சென்று விட்டார் என கூறியிருந்தார். அதில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தான் பயண தொலைவு ஆனால் மழையை காரணம் காட்டி ஊபர் நிறுவனம் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு ஆட்டோ கட்டணமாக 425 ரூபாய் என காட்டுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார் .
நடந்தே சென்றுவிட்டதாக பதிவு: ஒரு கிலோமீட்டர் தொலைவைக் கடக்க 425 ரூபாயா என அதிர்ச்சி அடைந்து தான் அந்த நபர் நடந்தே சென்று விட்டார் என கூறியிருக்கிறார். பெங்களூருவாசிகள் பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர். ஒரு பயனர் பெங்களூருவில் ஆட்டோ வாங்கி ஓட்டுவதற்கு சிறந்த நேரம் இதுதான் என கூறியிருக்கிறார். ஒரு நபர் எப்பொழுதுமே கையில் குடை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது ஒரு படகை வாங்கி விடுங்கள் அது தான் பெங்களூருவில் மழைக்காலங்களில் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.
சந்தா முறைக்கு மாற்றம்: ரேபிடோ, ஊபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்களில் எல்லாம் முன்பெல்லாம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒவ்வொரு ரைடுக்கும் ஒரு கணிசமான தொகையை கமிஷனாக இந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அந்த நடைமுறை மாறிவிட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள் மாதாந்திர சந்தா தொகையாக இந்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தினால் போதும் மற்றபடி பயணிகள் வழங்கக்கூடிய கட்டணம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சென்று சேர்ந்து விடும்.
போக்குவரத்து நெரிசல்: பெங்களூருவை பொறுத்தவரை எப்பொழுதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு நகரம் என்பதால் அங்கே ஆட்டோ மற்றும் வாடகை கார் கட்டணங்கள் எப்பொழுதுமே அதிகமாக தான் இருக்கும் .குறிப்பாக பீக் அவர்கள் மற்றும் மழைக்காலங்களில் குறைந்த தொலைவுக்கு கூட அதிக கட்டணம் தான் காண்பிக்கும் இருந்தாலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 425 ரூபாய் என்பது சற்று அதிகம் தான்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications