ஏஐ தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்க்கையில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக மாறிவிட்டது. பல்வேறு வேலைகளிலும் நாம் தொடர்ச்சியாக ஏஐ பயன்படுத்த தொடங்கி விட்டோம். ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்யக் கூடிய வேலைகள் அனைத்துமே படிப்படியாக ஏஐ வசம் சென்ற வண்ணம் இருக்கின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தால் சாதாரண ஊழியர்களின் வேலை தான் பறிபோகிறது என்றால் இது தலைமை செயல் அதிகாரிகளை கூட விட்டு வைக்காது என்பது தற்போது நிரூபணம் ஆகியிருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற ஊபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டாரா கோஷ்ரோசாஹி தன்னுடைய நிறுவனத்தில் தன்னுடைய வேலைக்கு ஆபத்து வந்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஊபர் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய பொறியாளர்கள் டாராவை போலவே ஒரு ஏஐ குளோனை உருவாக்கி இருக்கிறார்களாம். இது தொடர்பாக ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பகிர்ந்து இருக்கும் இவர், ஏஐ தலைமை செயல் அதிகாரி வேலையை கூட விட்டு வைக்காது என குறிப்பிட்டு இருக்கிறார்.
தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய பொறியாளர்கள் தன்னை போல ஏஐ குளோனை உருவாக்கி அதற்கு டாரா ஏஐ என பெயர் சூட்டிருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். என்னை வேலையில் இருந்து நீக்குவதற்காக அதனை அவர்கள் உருவாக்கவில்லை அதற்கு மாறாக என்னிடம் ஒரு பிரசன்டேஷனை மேற்கொள்ள வேண்டும் அல்லது குறிப்பிட்ட விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்பதற்கு முன்பாக என்னுடைய ஏஐ குளோனிடம் அவர்கள் விவாதிப்பார்கள் என்கிறார்.
நான் எப்படி எல்லாம் கேள்வி கேட்பேன் எப்படியெல்லாம் எதிர்வினையாற்றுவேன் என்பதற்கெல்லாம் தயாராகி விட்டு என்னிடம் வருவதற்காக இந்த டாரா ஏஐ பயன்படுத்திக் கொள்கிறார்கள் என கூறியிருக்கிறார். இப்போது என்னுடைய வேலைக்கு ஆபத்து இல்லாததை போல தோன்றலாம் ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் இதுபோன்ற ஏஐ கருவிகள் தலைமை செயல் அதிகாரி போன்ற மூத்த பதவிகளையும் விட்டு வைக்காது எனக் கூறியிருக்கிறார்.
நாம் அனைவருமே ஏஐ-ஆல் வேலை இழக்க போகிறோம் என குறிப்பிட்டு இருக்கிறார். பல்வேறு நிறுவன தலைவர்களும் கூட இதே கருத்தினை இதற்கு முன்பு முன் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் நடந்த ஏஐ உச்சி மாநாடு கலந்து கொண்ட ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், என்னுடைய தலைமை செயல் அதிகாரி வேலையை என்னை விட சிறப்பாக செய்யும் திறன் கொண்டதாக ஏஐ மாறிவிட்டது எனக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் கூட எந்த வேலைக்கும் ஏஐ இடம் இருந்து பாதுகாப்பு கிடையாது என்னுடைய வேலையை கூட கூடிய விரைவில் எடுத்துக் கொள்ளலாம் என்றார். தலைமை செயல் அதிகாரி பதவிக்கு இருக்கக் கூடிய பொறுப்புகளை மனிதர்களுடைய திறமையாக ஏஐ செய்து முடித்து விடும் என அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications