இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு நான்காவது கட்டத்தினை எட்டியுள்ளது. எனினும் இந்த முறை சில அத்தியாவசியம் தவிர பிற சேவைகளுக்கும் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில நகரங்கள் தவிர ஓலா மற்றும் உபெர் உள்ளிட்ட வாகன சேவை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஆனாலும் இதுவரை லாக்டவுனால் முடங்கியிருந்த ஆன்லைன் வாகன சேவையினால், உபெர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் இழப்பினை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக ஓலா நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தனது ஊழியர்களில் கணிசமான அளவு பணி நீக்கம் செய்தது.
இதற்கிடையில் தற்போது உபெர் இந்தியா நிறுவனமும் 600 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரோனாவின் தாக்கத்தினால் உபெர் இந்தியா கணிக்க முடியாத அளவு பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. இதன் காரணமாக பணி நீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் உபெர் கூறியுள்ளது.
இதனால் அதன் மொத்த ஊழியர்களில் 600 பேரினை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், தெற்காசியாவின் தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் உபெர் குடும்பத்தினரையும், எங்கள் சகாக்களையும், நிறுவனத்தில் இருந்து வெளியேறும் அனைவருக்கும் இது சோகமான நாள். நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மேலும் அவர்களுக்கு எனது நன்றியை கூற விரும்புகிறேன் என்றும் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
இவ்வாறு பணி நீக்கம் மூலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அடுத்த 10 வாரங்களுக்கு தொகை கொடுக்கப்படும் என்றும் உபெர் கூறியுள்ளது. எனினும் அது எவ்வளவு என்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதோடு அடுத்த ஆறு மாதங்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகையும் கவர் செய்யும். லேப்டாப்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் உபெர் தெரிவித்துள்ளது.
உபெர் மட்டும் அல்ல, பல ஸ்டார்டப் நிறுவனங்கள் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாகவே பணி நீக்கம் செய்து வருகின்றன. குறிப்பாக ஓலா, சோமேட்டோ, உபெர் இந்தியா, ஷேர்சாட், ஸ்விக்கி, உடான், லைவ்ஸ்பேஷ், லெண்டிங் கார்ட், பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications