சமீபத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய வாடகை கார் சேவை நிறுவனமான ஹெர்ட்ஸ் 1,00,000 டெஸ்லா கார்களை ஆர்டர் செய்த விஷயம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் கார்களின் முக்கியத்துவத்தையும் அதன் ஆதிக்கத்தையும் உறுதி செய்தது.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு டெஸ்லாவுக்கும், எலான் மஸ்க்-க்கு பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது.
ஹெர்ட்ஸ் நிறுவனம்
அமெரிக்கச் சந்தையில் திவாலாகும் நிலையில் இருந்து மீண்டு வந்த ஹெர்ட்ஸ் நிறுவனம் 4 பில்லியன் டாலர் மதிப்பில் 1,00,000 டெஸ்லா கார்களை ஆர்டர் செய்தது, ஆச்சரியம் அளிப்பது மட்டும் அல்லாமல் பல சந்தேகத்தையும் கொடுத்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில், வர்த்தக வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் உபர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
உபர் - ஹெர்ட்ஸ் கூட்டணி
அமெரிக்காவில் ஆன்லைன் டாக்ஸி சேவையில் பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் உபர் ஹெர்ட்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதாவது ஹெர்ட்ஸ் வாங்கும் 1,00,000 டெஸ்லா காரில் 50,000 டெஸ்லாகக் கார்களை உபர் டிரைவர்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள இரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளது.
முக்கிய நகரங்கள்
உபர் - ஹெர்ட்ஸ் நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தம் மூலம் நவம்பர் 1 முதல் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சான் டியாகோ மற்றும் வாஷிங்டன் DC ஆகிய பகுதிகளில் உபர் டிரைவர்கள் டெஸ்லா கார்களை ஹெர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் வாடகைக்கு எடுக்க முடியும்.
வர்த்தகம் உறுதி
இந்தத் திட்டம் 2023க்குள் அமெரிக்கா முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் உபர் - ஹெர்ட்ஸ் நிறுவனங்கள் கூறியுள்ளது. இந்தக் கூட்டணி மூலம் ஹெர்ட்ஸ் வாங்கும் 1,00,000 டெஸ்லா கார்களை முழுமையாகப் பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் வர்த்தகம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெஸ்லா
இதேபோல் ஹெர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர்டர் மூலம் டெஸ்லா கூடுதலாகத் தயாரிக்கும் கார்களும் வீண் ஆகாது, இதேபோல் பேப்பரில் இருப்பதைத் தாண்டி இது சாத்தியப்பட்டு உள்ளது. இந்த உபர் - ஹெர்ட்ஸ் கூட்டணி மூலம் மக்கள் மத்தியில் டெஸ்லா கார் மீது இருக்கும் தாக்கம் தணிக்கப்படுவது மட்டும் அல்லாமல் சுற்றுச்சூழலைப் பெரிய அளவில் பாதுகாக்க முடியும்.
எலான் மஸ்க் - 300 பில்லியன் டாலர்
புதன்கிழமை வர்த்தக முடிவில் டெஸ்லா நிறுவனப் பங்குகள் 1.91 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கு விலை 1,037.86 டாலரை அடைந்துள்ளது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.03 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட்டுள்ளது. மேலும் எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 292 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications