இந்தியாவை டெக் தளமாக மாற்ற உபர் முடிவு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர், வர்த்தகப் பாதிப்பு, நிதி நெருக்கடி, தொடர் மறுசீரமைப்புப் பணிகள், ஊழியர்கள் பணிநீக்கம் எனப் பல்வேறு மேசமான சூழ்நிலையில் இருந்து வரும் நிலையில், வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும் அதேபோல், செலவுகளைக் குறைக்கவும் முக்கியமான முடிவு எடுத்துள்ளது உபர் சிஇஓ Dara Khosrowshahi தலைமையிலான நிர்வாகம்.

 

தற்போது இருக்கும் சூழ்நிலையில் வர்த்தகத்தை மேம்படுத்தும் அதேபோல் அதிகளவிலான செலவுகளைக் கட்டுப்படுத்த ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் தனது இன்ஜினியரிங் இன்னோவேஷன் பிரிவை இந்தியாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

இதன் படி அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கத் துவங்கியுள்ளது உபர் இந்திய நிர்வாகம்.

கார்ப்பரேட் டாக்ஸி: புதிய வர்த்தகத்தில் இறங்கும் ஆனந்த் மஹிந்திரா

140 இன்ஜினியர்கள்

140 இன்ஜினியர்கள்

இந்தியாவிற்கு இன்ஜினியரிங் இன்னோவேஷன் பிரிவை மாற்ற முடிவு செய்த Dara Khosrowshahi, முதற்கட்டமாக 140 இன்ஜினியர்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இப்புதிய ஊழியர்கள் ரைடர், டிரைவர் குரோத், டெலிவரி, மார்கெட்பிளேஸ், கஸ்டமர் சர்வீஸ், டிஜிட்டல் பேமெண்ட்ஸ், ரிஸ்க், பாதுகாப்பு மற்றும் நிதியியல் தொழில்நுட்பம் பிரிவுகளில் பல புதிய பிராடெக்ட்களை உருவாக்க உள்ளனர்.

செலவு குறைப்பு

செலவு குறைப்பு

அமெரிக்காவில் இருந்து உபர் இந்தியாவிற்கு இன்ஜினியரிங் இன்னோவேஷன் பிரிவை மாற்ற முடிவு செய்ய முக்கியக் காரணம், மற்ற நாடுகளை விடவும் திறன் வாய்ந்த் டெக் பணியாளர்கள் குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் என்பதால் தான்.

இதை உபர் சிஇஓ Dara Khosrowshahi தெரிவித்துள்ளதாக முன்னணி வெளிநாட்டுப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

Work From Home
 

Work From Home

மேலும் உபர் தன் ஊழியர்களுக்கு அடுத்த வருடம் ஜூலை மாதம் வரையில் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும், வீட்டிலேயே அலுவலகத்தை அமைத்துக்கொள்ள 500 டாலரை அறிவித்துள்ளது.

ஊழியர்கள் பணிநீக்கம்

ஊழியர்கள் பணிநீக்கம்

தற்போது இந்தியாவில் 140 பணியாளர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ள உபர், சில மாதங்களுக்குத் தனது சர்வதேச வர்த்தகத்தில் இருந்து சுமார் 6,700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, இதில் இந்தியாவில் இருந்து 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uber plans to shift engineering innovation to India

Uber plans to shift engineering innovation to India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X