பெங்களூரில் மீண்டும் உபர் மற்றும் ரேப்பிடோ செயலிகள் தங்கள் பைக் டாக்சி சேவைகளை தொடங்கியுள்ளன. ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மத்திய அரசு நெருக்கடியாலும், நீதிமன்றத்தின் உத்தரவாலும் பாதிக்கப்பட்ட பைக் டாக்சி சேவை இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கியுள்ளது.
பைக் டாக்சி சேவைகள் ஜூன் 16 ஆம் தேதி முதல் கர்நாடக மாநில அரசால் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இது ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சோகம் அளித்தாலும், தினசரி வருமானத்திற்கு இந்த சேவையை நம்பியிருக்கும் பல லட்சம் மக்களுக்கும் நிம்மதி அளிக்கும் செய்தியாக உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, பைக் டாக்சி சேவைக்கு முறையான விதிமுறைகள் இல்லாதது, ஆட்டோ ஓட்டுனர்களின் வர்த்தகம், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, பைக் டாக்சி சேவையில் இருக்கும் பாதுகாப்பு அச்சம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு பைக் டாக்ஸி செயல்பாடுகளுக்கு முழுமையான தடை விதித்தது. இதை கர்நாடக நீதிமன்றமும் ஏற்று அரசு முறையாக விதமுறை ஒழுங்குமுறையை நடைமுறைப்படுத்தும் வரை பைக் டாக்சி செயல்பட கூடாது உத்தரவிட்டது. இது மட்டும் அல்லாமல் கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் அனைத்து நிறுவனமும் பைக் டாக்சி சேவையை நிறுத்தவும் உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதனால், டாக்சி செயலிகள் தங்கள் சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தத் தடைக்கு முன்பு, பெங்களூரில் சுமார் 1.20 லட்சம் தனியார் பைக்குகள் டாக்சி சேவை அளிக்கும் செயலிகளுடன் இணைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மக்கள், இந்த பைக் டாக்சி சேவைகளை நம்பி வாழ்வாதாரமாக நம்பி வந்தனர். இத்தகைய தடை, இவர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.
இந்தத் தடைக்கு எதிராக, டாக்சி செயலிகளின் நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன. புதன்கிழமை, நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை செப்டம்பர் 22 ஆம் தேதி வரை ஒத்திவைத்தது.
இந்த தடை லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், அரசு இதை தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
மேலும், பல மாநிலங்களில் பைக் டாக்சிகள் இயங்க அனுமதி உள்ளதை சுட்டிக்காட்டி, அரசின் கொள்கை கட்டமைப்பை தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்றம் செயலிகளுக்கு சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் நிலைப்பாடு
போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கா ரெட்டி இது குறித்து கூறுகையில், நீதிமன்றம் வழக்கை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளதாகவும், அரசு தனது கொள்கை நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் பைக் டாக்சிகள் இயங்குவதை கவனத்தில் கொண்டு, இதை ஆலோசிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், செயலிகளுக்கு சேவைகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் உறுதிப்பட விளக்கினார்.
மேலும், அரசின் சட்ட ஆலோசகருடன் பேசி அவரது கருத்தைப் பெறுவேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்தச் சூழலில், அரசின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்தச் சேவை மீண்டும் தொடங்கியது குறித்து உபர் மற்றும் ராப்பிடோ நிறுவனங்கள் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதேபோல் நீதிமன்றம் கர்நாடக அரசின் பைக் டாக்சி சேவை தடை உத்தரவு செல்லும் என்றும் அறிவிக்கவில்லை.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications