அமெரிக்காவின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான உபெர் இந்தியாவிலும் அதன் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் மற்றொரு முன்னணி ஆல்கஹால் டெலிவரி நிறுவனமான டிரிஸ்லியை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 1.1 பில்லியன் டாலர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஸ்டார்டப் நிறுவனங்களும் இணையும் போது, உபெரின் சேவையை மேற்கொண்டு விரிவுபடுத்த முடியும்.
ஏற்கனவே உணவு டெலிவரி சேவையினை செய்து வரும் உபெர் நிறுவனம், இதன் மூலம் இனி மதுபானங்கள் டெலிவரியும் செய்ய முடியும். இதனால் உபெரின் வணிகத்தினை மேற்கொண்டு விரிவாக்கம் செய்ய முடியும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கிடையில் தான் அமெரிக்கா பங்கு சந்தையில் உபெரின் பங்கு விலையானது 7% அதிகரித்துள்ளது.
ஆன்லைன் ஆர்டர் அதிகரிப்பு
கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் கடைகளுக்கு சென்று ஆல்கஹால் ஆர்டர் செய்வதற்கு பதிலாக, வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்து வருவதனால், பெரும் முன்னேற்றத்தினை கொண்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவான வளர்ச்சியினை கொண்டுள்ளது.
ஆல்கஹால் டெலிவரி சேவை
அமெரிக்காவின் போஸ்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் 1,400க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது சேவையை செய்து வருகின்றது. இந்த நிறுவனம் பீர், ஓயின் மற்றும் மதுபானங்களை டெலிவரி செய்து வருகிறது. சராசரியாக காலகட்டத்தினை விட, அமெரிக்காவில் லாக்டவுன் சமயத்தில் விற்பனை வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கிட்டதட்ட 400% அதிகமாகும்.
கொரோனா காலத்தில் வணிகம் எப்படி?
அதோடு நுகர்வோர் அடிக்கடி ஆர்டர் செய்தததாகவும் தெரிவித்துளது. இதே உணவு டெலிவரி மற்றும் டாக்ஸி மற்றும் வாகன சேவையை செய்து வந்த உபெர் நிறுவனம் இந்த காலகட்டத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது. சொல்லப்போனால் பணி நீக்கம் செய்தது. எனினும் இது மின்சார வாகன சேவை, டாக்ஸி சேவை, வாடிக்கையாளரே சுயமாக ஓட்டிச் செல்லும் சேவையினையினை வழங்கியது.
மூன்றாவது காலாண்டு விற்பனை
இதற்கிடையில் மூன்றாவது காலாண்டில் டெலிவரி விற்பனையானது 125% அதிகரித்தது.
ஆக இப்படி இருபெரும் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளது, இவற்றின் சேவையை இன்னும் மேம்படுத்துடன், வணிகத்தினையும் விரிவாக்கம் செய்ய முடியும். இதன் காரணமாக லாபமும் அதிகரிக்கலாம்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications