உபர் அப்ளிகேஷனை பயன்படுத்தும் போது ஒரு விசித்திரமான அனுபவத்தை எதிர்கொண்டதாக ஒரு பயனர் தனது X தளத்தில் பதிவிட்டிருக்கிறார். தனது மகளின் போனைப் பயன்படுத்தி பயணத்திற்கு புக் செய்யும் போது 50 ரூபாய் குறைவாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தன்னுடைய போனை பயன்படுத்தி உபர் புக் செய்யும் போது 50 ரூபாய் அதிகமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த அந்த நபர் தனது X பக்கத்தில் கட்டணத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்திருக்கிறார்.
சுதிர் என்ற X பயனர் "தன் மகள் போன் மற்றும் தனது போனில் உபர் முன்பதிவு செய்யும்போது வெவ்வேறு கட்டணங்கள் காண்பிக்கப்படுவதை தெரிவித்திருந்தார். ஒரே பிக்கப் பாய்ண்ட், ஒரே செல்லுமிடம், ஒரே நேரம் கொடுத்துதான் உபர் முன்பதிவு செய்தோம்.. ஆனால் 2 போன்களிலும் வெவ்வேறு கட்டணங்கள் காண்பிக்கப்படுகின்றன.

எனக்கு எப்பொழுதுமே அதிக விலை தான் காண்பிக்கப்படுகிறது. எனவே எப்போதும் உபர் புக் செய்தாலும் என் மகளை விட்டு முன்பதிவு செய்யும்படி கேட்கிறேன். இதுபோல உங்களுக்கு நிகழ்ந்து இருக்கிறதா? என்று கேட்டு கட்டணங்களின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்திருந்தார்.
சுதிர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டில் ஆண்ட்ராய்டு போன் மற்றும் ஐபோன் இருந்தது. எனவே பல X பயனர்கள் போன்களின் அடிப்படையில் கட்டணம் மாறுகிறதா? என்று யூகிக்கத் தொடங்கினர். ஏனெனில் ஐபோன் பயனர்கள் இதற்கு முன்னரும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் 2 ஐபோன்களைப் பயன்படுத்தினாலும் கட்டண வித்தியாசம் ஏற்படுவதாக சுதீர் இன்னொரு போஸ்டில் பகிர்ந்திருந்தார். ஒரு X பயனர் ஐபோன் பயன்படுத்தப்படுவதால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சுதீர் நானும் என் மகளும் ஒரே நேரத்தில் தான் ஐபோன் வாங்கினோம், ஒரே ஐபோன் தான் என்று பதில் அளித்திருந்தார். நடந்த சம்பவம் குறித்து உபர் நிறுவனத்தின் தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
மற்றொரு X பயனர் ஒருவேளை நீங்கள் அடிக்கடி முன் பதிவு செய்கிறீர்கள் என்றால் அதற்கு அதிக கட்டணங்கள் இருக்குமோ என்று யூகித்தார். உபரை குறைவாக பயன்படுத்தும் பயனர்களை ஊக்குவிக்கும் விதமாக நிறுவனம் கட்டணங்களை குறைக்கிறது. விமான நிலையங்களில் இருந்து 50 மீட்டர் நடந்து சென்று உபர் முன்பதிவு செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் குறைகிறது என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications