கிரெடிட் சூயிஸ்-ஐ கைப்பற்றும் UBS.. ஐரோப்பிய நிதி சந்தை சரிவிலிருந்து தப்பித்தது..!

சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியான Credit Suisse புதிய நிதியை திரட்ட முடியாமல் பணப்புழக்க பிரச்சனையில் மாடிக்கொண்டது.

இந்த பிரச்சனையை சமாளிக்கும் விதமாக Credit Suisse தனது பணப்புழக்க பிரச்சனையை சரி செய்ய சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank -ல் இருந்து 54 பில்லியன் டாலர் அதாவது 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவிலான தொகையை கடனாக பெற்றது.

ஆனாலும் கிரெடிட் சூயிஸ் நிலைமை மேம்பட்டதாக தெரியாத நிலையில் கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்யப்பட பேச்சுவார்த்தை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

  UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகள்

UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகள்

UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை துவங்க முக்கியமான காரணம் சுவிஸ் நேஷ்னல் வங்கி மற்றும் அந்நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்பான FINMA வலியுறுத்தல் கீழ் இந்த பேச்சுவார்த்தை துவங்கப்பட்டது.

ஐரோப்பிய நிதிநிலை

ஐரோப்பிய நிதிநிலை

UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகள் இணைக்கப்பட்டால் சுவில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் நிதிநிலை குறித்த அச்சம் குறையும்.

3 பில்லியன் பிராங்க்

3 பில்லியன் பிராங்க்

இந்த பேச்சுவார்த்தையில் UBS வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாக வாங்க முடிவு செய்துள்ளது. இந்த முக்கியமான கைப்பற்றலில் UBS வங்கி சுமார் 3 பில்லியன் பிராங்க் தொகைக்கு கிரெடிட் சூயிஸ் வங்கியை வாங்க முடிவு செய்துள்ளது.

UBS -  கிரெடிட் சூயிஸ் கைப்பற்றல்

UBS - கிரெடிட் சூயிஸ் கைப்பற்றல்

UBS - கிரெடிட் சூயிஸ் வங்கி கைப்பற்றல் திட்டத்தில், யூபிஸ் அனைத்து பங்குகளையும் 3 பில்லியன் பிராங்க் தொகைக்கு வாங்க உள்ளது. கிரெடிட் சூயிஸ் தனது 2007 உச்ச விலையில் இருந்து 99 சதவீதம் வரையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகிய வங்கிகளின் திவாலானது மூலம் கிரெடிட் சூயிஸ் திடிரென அதிக பாதிப்பை எதிர்கொண்டதால் தற்போது விற்பனை செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது.

 பத்திரங்கள் ரத்து

பத்திரங்கள் ரத்து

UBS - கிரெடிட் சூயிஸ் வங்கி கைப்பற்றல் திட்டத்தின் கீழ், கிரெடிட் சூயிஸ் வங்கியின் 16 பில்லியன் பிராங்க் மதிப்பிலான பத்திரங்களை முழுமையாக நீக்கியுள்ளது. ஐரோப்பிய வங்கி கட்டுப்பாட்டு அமைப்பு வங்கிகள் மோசமான நிலையை எதிர்கொள்ளும் போதும் சிறப்பு பத்திரங்களை வழங்கும், இந்த பத்திரங்கள் வங்கி மூலதனம் குறிப்பட்ட அளவுக்கு கீழ் குறையும் போது அளிக்கப்படும்.

கிரெடிட் சூயிஸ்

கிரெடிட் சூயிஸ்

இதன் மூலம் சுவிஸ் நாட்டின் 2 முன்னணி வங்கிகளான UBS - கிரெடிட் சூயிஸ் வங்கி ஒன்றாக இணைக்கப்பட உள்ளது. உலகின் முக்கியமான 30 நிதி அமைப்புகளில் கிரெடிட் சூயிஸ்-யும் ஒன்று, தற்போது கிரெடிட் சூயிஸ் வரலாறு இன்றுடன் முடிவடைகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+