கோடக் மகேந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் மும்பையின் Worli Sea Face பகுதியில் இருக்கும் அனைத்து குடியிருப்புகளையும் தனக்கு சொந்தமானதாக மாற்றியிருக்கிறார். இதற்காக இவர் 400 கோடி ரூபாய் செலுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவாக ஒரு சதுர அடிக்கு 2.75 லட்சம் ரூபாயை இவர் செலுத்தி இந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை வாங்கி இருக்கிறார். ஏற்கனவே உதய் கோடக் குடும்பத்தினர் வார்லி பகுதியில் 13 அடுக்குமாடி குடியிருப்புகளை சொந்தமாக வைத்திருக்கின்றனர். தற்போது அத்துடன் கூடுதலாக 8 குடியிருப்புகளை சேர்த்து இருக்கின்றனர்.

மும்பையின் வார்லி பகுதியில் மொத்தம் 24 குடியிருப்புகள் இருக்கின்றன. கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 13 குடியிருப்புகளை ஒரு சதுர அடிக்கு 2.72 லட்சம் ரூபாய் என்ற விலை கொடுத்து உதய் கோடக் வாங்கினார். இந்த நிலையில் மீதமிருந்த குடியிருப்புகளை அவர் ஒரு சதுர அடிக்கு 2.75 லட்சம் ரூபாய் என செலுத்தி வார்லி பேஸ் பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளையும் தனக்கு சொந்தமானதாக மாற்றி இருக்கிறார்.
கார்பெட் ஏரியா அடிப்படையில் பார்க்கும்போது இந்த பகுதியில் ஒரு சதுர அடியின் விலை 2.90 லட்சமாக இருக்கும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த முறை ஒரு குடியிருப்புக்கு குறைந்தபட்சம் 12 கோடி ரூபாயிலிருந்து அதிகபட்சம் 28 கோடி ரூபாய் வரை உதய் கோடக் வழங்கியிருக்கிறார். குடியிருப்புகளின் அளவு 444 சதுர அடியில் இருந்து 1000 சதுர அடிகள் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமாக அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை வாங்குவதற்காக மட்டும் உதய் கோடக் குடும்பம் 400 கோடி ரூபாயை இதுவரை செலவு செய்திருக்கிறது. இதில் 1396 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தான் பெரியது என்றும் இதற்காக உதய் கோடக் கோடி ரூபாயை செலுத்தி இருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. இதில் குறைந்தபட்ச அளவு கொண்டு வீடு வெறும் 173 சதுர அடி கொண்டதாக இருக்கிறது இதற்காக அவர் 4.7 கோடி வழங்கி இருக்கிறார்.
இந்தியாவிலேயே ரியல் எஸ்டேட் மதிப்பு வேகமாக உயர்ந்து வரும் ஒரு சந்தையாக மும்பை இருக்கிறது. குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகள் அதிக அளவில் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் ஒரு நகரமாக மும்பை மாறி இருக்கிறது. இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் பலரது வாழ்விடமாக மும்பை இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கே ரியல் எஸ்டேட் மதிப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications