இந்தியாவின் டாப் பில்லியனர்களில் ஒருவராக இருப்பவரைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். கிரிக்கெட் வீராராக வரவேண்டும் என்ற ஆசையில் கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டியவர் ஒரு ஆட்டத்தின் போது தலையில் ஏற்பட்ட காயம் அவரின் கிரிக்கெட் லட்சியத்தை பாழாக்கியது. அந்த ஆசை இறுதியாக அவரை படுக்கைக்கும் அழைத்து சென்றது. ஆனால், இன்று அவருக்கு ரூ.1,14,333 கோடி சொத்து உள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் இழப்பு 15,954 கோடியையும் அவர் இழந்துள்ளார். அவர் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அனைவரும் வளரும்போது எப்படி இருக்க வேண்டும் என்று ஒருமுறையாவது கனவு காணாமல் இருந்திருக்க மாட்டோம். ஆனால் அந்த கனவை இதுவரை அடைந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில், கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டு இறுதியில் வங்கியின் நிறுவனராக மாறிய ஒரு இந்தியரின் கதைதான் இது. இன்று இந்தியாவின் தலைசிறந்த கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். அவர்தான் கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக்

65 வயதான அவர் தற்போது பெரிய இழப்பை பதிவுசெய்துள்ளார். ஆம், திங்கட்கிழமை பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் அவருக்கு ஒரு நாள் இழப்பு ரூ.15,954.65 கோடி ஆனது. அவர் கட்டமைத்த நிறுவனம்தான் கோட்டக் மஹிந்திரா வங்கி. திங்களன்று அவரது நிகர மதிப்பு சரிந்ததால் கோடக் வங்கி பங்குகள் 5 சதவீதம் சரிந்தன.
கோடக் மஹிந்திரா வங்கியின் செப்டம்பர் காலாண்டு வருவாய் புள்ளிவிவரங்கள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதன் மூலம் வங்கியின் சந்தை மதிப்பு ரூ.15,954.65 கோடி குறைந்து ரூ.3,55,784.02 கோடியாக உள்ளது. இதனால் இந்த பங்கு சென்செக்ஸில் பின்தங்கி இருந்தது. கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தது. இது பங்குச் சந்தை சரிவிற்கு முக்கிய காரணமானது.
இருந்தபோதிலும், அவர் இந்தியாவின் முதல் கோடீஸ்வரர்களில் ஒருவராகவே உள்ளார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, உதய் கோடக்கின் தற்போதைய நிகர மதிப்பு ரூ.1,14,333 கோடி ஆகும். இந்தியாவின் பணக்கார வங்கியாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கோடக் மஹிந்திரா வங்கி இன்று முதல் நான்கு தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும்.
மும்பையில் பிறந்த உதய் கோடக் தனது குழந்தைப் பருவத்தை கூட்டுக் குடும்பத்தில் கழித்தவர். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர். ஆனால் ஒரு போட்டியின் போது தலையில் ஏற்பட்ட காயம், அவர் தனது நாட்டத்தை பாதியிலேயே முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது. இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற அவரது கனவு முடிவுக்கு வந்தது. அறுவை சிகிச்சை செய்து சில மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
இதற்கிடையில்தான், 1980 ஆம் ஆண்டில், உதய் கோடக் தனது சொந்த நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். இது 2003ல் வங்கியாக மாற்றப்பட்டது. அதுதான் கோடக் மஹிந்திரா வங்கி. சனிக்கிழமை வெளியிடப்பட்ட கோடக் மஹிந்திரா வங்கியின் செப்டம்பர் காலாண்டு அறிக்கையின்படி, வங்கியின் லாப வளர்ச்சி 13 சதவீதமாக 5,044 கோடி ஆக இருந்தது. அதன் துணை நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுதான் இந்த சாதனைக்குக் காரணம். தனியாக கோட்டக் மஹிந்திராவின் நிகர லாபம் 5 சதவீதம் அதிகரித்து ரூ.3,344 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications