கோட்டக் மஹிந்திரா வங்கியின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த ஆசியாவின் பணக்கார வங்கியாளர் உதய் கோட்டக், தனது ₹10,000 முதலீடு தனக்கு கோடிக்கணக்கான வருமானத்தை எப்படிக் கொடுத்தது என்பது பற்றி சுவாரஸ்யமாக கூறியுள்ளார்.
இது பற்றி எக்ஸ் தளத்தில் செய்த பதிவில், "நாங்கள் இப்போது ஒரு சிறந்த வங்கி மற்றும் நிதி நிறுவனமாக உள்ளோம். முதலீட்டாளர்களின் நம்பிக்கையுடன், வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் நிர்வாகத்தை உருவாக்கியுள்ளோம்.
நாங்கள் எங்கள் பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்கி, 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நேரடியாக வேலைவாய்ப்பை வழங்கியுள்ளோம்.

1985-ல் எங்களிடம் ₹10,000 முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு ₹300 கோடியாக இருக்கும் என்று உதய் கோட்டக் டிவிட்டரில் தெரிவித்தார். இந்த வேல்யூ கிரேயேஷன்-ஐ சந்தைக்கு வரும் நிறுவனங்களால் உருவாக்க முடியுமா என்ற கேள்வி அனைத்து முதலீடட்டாளர்களுக்கும் உள்ளது.
38 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஜேபி மோர்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கும் கனவைக் கண்டேன். இந்தக் கனவோடு தான் மும்பையில் 300 சதுர அடி அலுவலகத்தில் 3 ஊழியர்களுடன் கோட்டக் மஹிந்திரா வங்கியை அவர் தொடங்கினார்.
இந்தியாவை ஒரு சமூக மற்றும் பொருளாதார அதிகார மையமாக மாற்றுவதில் இந்தியருக்குச் சொந்தமான இந்த நிறுவனம் இன்னும் முக்கியப் பங்காற்றும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
சனிக்கிழமையன்று, உதய் கோட்டக், நிர்வாகமற்ற இயக்குநராகப் பொறுப்பேற்பார். ஆனால் அதற்கு முன்னதாகவே கோட்டக் மகிந்திரா வங்கியின் இணை நிர்வாக இயக்குனரான தீபக் குப்தாவிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கியின் உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, டிசம்பர் 31 ஆம் தேதி வரை இடைக்கால எம்டி மற்றும் சிஇஓவாக குப்தா பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
1 ஜனவரி 2024 முதல் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ வின் ஒப்புதலுக்காக ஏற்கனவே ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பத்தை உதய் சமர்ப்பித்துள்ளார். கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர், டிசம்பர் 31 ஆம் தேதி தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ராஜிநாமா செய்துள்ளார், இந்த முடிவு தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications