இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாக இருக்கும் கோட்டா மஹிந்திரா வங்கி-க்கு புதிய சிஇஓ-வை அடுத்த 6 மாதத்திற்குள் நியமிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில் யார் அந்தப் புதிய சிஇஓ என அனைவருக்கும் எதிர்பார்த்து இருக்கும் வேளையில் முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
பலரும் கோட்டா மஹிந்திரா வங்கியின் அடுத்தத் தலைவர் உதய் கோடக் மகன் ஜெய் கோடக் தான் எனப் பேசி வந்த நிலையில் கேவிஎஸ் மனியன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
உதய் கோடக்
உதய் கோடக் 1985 முதல் கோடக் மஹிந்திரா வங்கியை பல முக்கியப் பதவிகளில் இருந்து இயக்கி வருகிறார், இந்த நிலையில் 5 வருடத்திற்கு முன்பு உதய் கோடக் மகன் ஜெய் கோடக் இவ்வங்கி பணியில் சேர்ந்தார்.
ஜெய் கோடக்
இதனால் பலரும் ஜெய் கோடக் கோட்டா மஹிந்திரா வங்கி-யின் சிஇஓ-வாக இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கும் எனப் பேசி வந்த நிலையில் இவ்வங்கியின் whole-time director ஆக இருக்கும் கேவிஎஸ் மனியன், ஜெய் கோடக் சிஇஓ பதவிக்குப் போட்டிப்போடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கேவிஎஸ் மனியன்
மேலும் ஜெய் கோடக் இளைமையானவர், சிஇஓ பதவிக்கு அவர் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் எனக் கேவிஎஸ் மனியன் ஒரு இண்டர்வியூவ்-ல் தெரிவித்தார். அடுத்த 5-6 மாதத்தில் அறிவிக்கப்படும் சிஇஓ கோடக் வங்கியின் விரிவாக்கத்திற்குத் திட்டம் தீட்ட வேண்டியது முக்கியப் பணியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இந்த வருட துவக்கத்தில் நாட்டின அனைத்து வணிக வங்கிகளிலும் சிஇஓ பதவியில் அதிகப்படியாக ஒருவர் 15 வருடம் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதித்தது. இதேபோல் வங்கியின் நிறுவனர் அல்லது அதிகப் பங்குகளை வைத்துள்ள பங்குதாரார் அதாவது ப்ரோமோட்டர் சீஇஓ-வாக இருப்பவர்கள் அதிகப்படியாக 12 வருடம் மட்டும் இப்பதவியில் இருக்க வேண்டும்.
70 - 75 வயது வரம்பு
இதேபோல் 70 வயதிற்கு அதிகமானோர் யாரும் இந்திய வங்கிகளின் தலைவராகப் பணியாற்றக் கூடாது என்றும், non-executive directors மற்றும் நிர்வாகத் தலைவர் பதவியில் இருப்பவர்கள் 75 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் ஆர்பிஐ அறிவித்திருந்தது.
வங்கிகள்
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வங்கிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது. இந்த விதிமுறையைப் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தால் பல வங்கிகள் சிஇஓ முதல் நிர்வாகக் குழு வரையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன் வாயிலாகவே கோடக் மஹிந்திரா வங்கியின் சிஇஓ பதவியில் இருந்து உதய் கோடக் வெளியேற வேண்டிய கட்டாயம் உருவாக்கியுள்ளது.
18 ஆண்டுகள்
கோடக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய சிஇஓ-வான உதய் கோடக் 2003- 04ஆம் நிதியாண்டில் இருந்து, இவ்வங்கியின் நிர்வாக இயங்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஏற்கனவே 18 ஆண்டுகள் கோடக் மஹிந்திரா வங்கியின் உயர் பதவியில் இருந்து நிலையில் இனி இருக்க முடியாது.
3 வருட நீட்டிப்பு
ஆனால் கோடக் மஹிந்திரா வங்கி-யின் நிர்வாகம் ஏப்ரல் 1, 2021ல் உதய் கோடக்-ன் பதவிக் காலத்தை 3 வருடங்கள் நீட்டித்த நிலையில், ஜனவரி 2024 வரையில் மட்டுமே இப்பதவியில் இருக்க முடியும். இதற்கிடையில் குறைந்தபட்சம் ஏப்ரல் 2023க்குள் இவ்வங்கியின் புதிய தலைவரைத் தேர்வு செய்தாக வேண்டிய நிலை இருப்பதால் அடுத்த 5- 6 மாதத்தில் புதிய சிஇஓ யார் என்ற அறிவிப்பை வெளியிட்டாக வேண்டும்.
டிசம்பர் 2023 உடன் முடிவு
சமீபத்தில் உதய் கோடக் அவர்களுக்கு அளிக்கப்பட்ட 3 வருட பதவி நீட்டிப்பு டிசம்பர் 2023 உடன் முடிவடையும் நிலையில், அடுத்தச் சிஇஓ பதவியில் உட்காரபோவது இவ்வங்கியின் முக்கியப் பதவியில் இருக்கும் உதய் கோடக்-ன் மூத்த மகனான ஜெய் கோடக் தான் பேசப்பட்டது.
ஜெய் கோடக் முக்கியத்துவம்
இதேபோல் கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாகக் குழுவின் கூட்டம் முதல் பல முக்கியமான இடத்தில் உதய் கோடக்-ன் மூத்த மகன் ஜெய் கோடக்-கிற்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
உதய் கோடக்-ன் மூத்த மகனான ஜெய் கோட்டா கடந்த 5 வருடமாகக் கோடக் மஹிந்திரா வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பிஏ பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த ஜெய் கோடக் மெக்கன்சி அண்ட் கோ மற்றும் கோல்டுமேன் சாச்சஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications