இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவரும், முன்னணி வங்கியில் மூத்த பொறுப்பில் இருக்கும் உதய் கோடாக்-இன் மகன் ஜெய் கோடாக், முன்னாள் மிஸ் இந்தியா அழகி அதிதி ஆர்யா-வை மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து கொண்டார்.
ஜெய் கோடாக் - அதிதி ஆர்யா திருமணம் பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடந்த நிலையில், திருமணத்தின் மற்ற முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் உதய்பூரில் ஆடம்பர முறையில் திட்டமிடப்பட்டு நடைபெற உள்ளது. கோட்டாக் மஹிந்திரா வங்கியின் சிஇஓ ஆக ஜெய் கோடாக் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஏமாற்றம் அடைந்தார்.

ஜெய் கோடாக் - அதிதி ஆர்யா இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விருந்தில் சந்தித்தனர், இந்த சந்திப்பின் போது இருவருக்குமான உரையாடல் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இதன் பின்பு பார்த்த உடனே காதல் என்பது போல் ஜெய் கோடாக், அதிதி ஆர்யா-வின் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்திருந்தார், அதன் பிறகு இருவரும் நெருக்கமாகிவிட்டனர்.
ஜெய் கோடக் மற்றும் அதிதி ஆர்யா ஆகஸ்ட் 2022 இல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக வதந்தி பரவியது; நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முன் ஜோடி போஸ் கொடுக்கும் படமும் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் யாரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் சிஇஓ பதிவிக்கான தேடல் முக்கியமான அப்போது இருந்தது.
இந்த நிலையில் தான் மே மாதம் ஜெய் கோடக் தனது டிவிட்டரில் என் வருங்கால மனைவி அதிதி இன்று யேல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார். அதிதி ஆர்யாவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டதன் மூலம் உறுதி செய்யப்பட்டு தற்போது திருமணம் செய்துள்ளனர்.
குருகிராமைச் சேர்ந்த அதிதி ஆர்யா, 2015 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார் மற்றும் சீனாவில் நடந்த உலக அழகி 2015 இல் இந்தியாவின் சார்பில் கலந்துக்கொண்டார். அவரது அழகுப் போட்டி பயணத்துடன், அதிதி எர்ன்ஸ்ட் அண்ட் யங்க் நிறுவனத்தில் ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1983 ஆம் ஆண்டு இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று திரைப்படமான "83" மூலம் அதிதி ஆர்யா பாலிவுட்டில் அறிமுகமானார். ஜெய் கோடக், தற்போது கோடக் 811 இன் இணைத் தலைவராக உள்ளார்.
இந்திய வங்கி துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் திட்டத்துடன் 38 ஆண்டுகளுக்கு முன்பு உதய் கோடக் நிறுவிய ஒரு நிறுவனத்தில் இருந்து MD மற்றும் CEO பதவியில் இருந்து செப்டம்பர் மாதம் விலகினார்.
இதை தொடர்ந்து, அசோக் வாஸ்வானி-யை வங்கியின் அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (MD மற்றும் CEO) நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளதாக கோட்டக் மஹிந்திரா வங்கி அக். 21 ஆம் தேதி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications