மகாராஷ்டிராவில் சிவசேனா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதானி ரியாலிட்டிக்கு தரப்பட்ட தாராவி மறுமேம்பாடு திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்வது புதுப்பிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் புதிதாக டெண்டர் விடப்படும் என்று சிவசேனை கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அத்துடன் தற்போதைய அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிதாக டெண்டர் விடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் தனது மாதோஸ்ரீ இல்லத்தில் தாக்கரே கூறுகையில் தாராவியை காலி செய்யக் கூடாது. அங்கு குடியிருப்போருக்கு குறைந்தது 500 சதுர அடியில் வீடுகள் அதே இடத்தில் வழங்கவேண்டும். நாங்கள் தாராவி சேரி மறு மேம்பாடு திட்டத்தின் ஒப்பந்தத்தை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம். அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்டட நிபந்தனைகளுடன் புதிய டெண்டரை வெளியிடுவோம்.

இந்த டெண்டரை இப்போதே ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும். மும்பையை அதானி நகரமாக்க விட மாட்டோம். மகாராஷ்டிர அரசு அதானி குரூப்புக்கு அளவுக்கதிகமான சலுகைகளை தருகிறது. எங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சிவ சேனை தொண்டர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்றார்.
உத்தவ் தாக்கரேயின் கருத்து பற்றி மகாராஷ்டிர அரசு முதன்மை செயலர் வல்சா நாயரிடம் கேட்டபோது, எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. அதனால் நான் கருத்து எதுவும் சொல்ல முடியாது. இந்த திட்டத்தின் சிஇஓதான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார். இதனிடையே தாராவி மறுமேம்பாடு திட்டம் பிரைவேட் லிமிடெட்டின் செய்தித் தொடர்பாளர் தாக்கரே கருத்து பற்றி பதில் தர மறுத்துவிட்டார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு சிவசேனை தலைவர் ராகுல் ஷெல்வாலே, தாக்கரேயின் குற்றச்சாட்டில் அடிப்படையே இல்லை. வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் நன்கொடைகளை மனதில் வைத்து அவர் இவ்வாறு பேசியுள்ளார் என்றார். மேலும், அதானி மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி இந்தத் திட்டத்துக்கு தாக்கரே முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறார்.
தேர்தல் ஆணையம் அண்மையில் நன்கொடைகள் வாங்குவதற்கு சிவசேனைக்கு அனுமதி தந்தது. இதனால்தான் தாராவி மறுமேம்பாடு திட்டம் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இப்படிச் சொல்வதன்மூலம் கட்சிக்கு நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளார்.
தாராவிக்காரர்களுக்கு 350 சதுர அடியில் வீடுகள் தரும் முடிவு தாக்கரேயின் ஒப்புதலின்படிதான் எடுக்கப்பட்டது. அத்தோடு தாராவியில் குடியிருப்போருக்கு 350 சதுர அடிக்கு மேல் வீடுகள் தரமுடியாது என்பதும் தாக்கரேவுக்குத் தெரியும்.
இருப்பினும் சாத்தியமே இல்லாத 500 சதுர அடி வீடு பற்றி பேசுவது மக்களை குழப்புவதற்காகத்தான்.
மேலும் தாராவியில் உள்ள நிலத்தை அப்படியே மறுமேம்பாடு திட்டத்துக்கு பயன்படுத்த முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். அங்கு இயற்கை பூங்கா, தாராவி கோலிவாடா, கழிவு நீர் திட்டம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும்.
பல வருடங்களாக கிடப்பில் இருந்த தாராவி மறுமேம்பாடு திட்டம் ஷிண்டே தலைமையிலான ஆட்சி வந்ததும் இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி எதிர்கட்சிகள் அந்தத் திட்டத்தை நிறுத்தப் பார்க்கின்றன. தாராவிக்காரர்கள் மீது உண்மையில் அவர்களுக்கு அக்கறை இல்லை. தங்களது சொந்த அரசியல் லாபத்துக்காக இப்படி பேசுகின்றனர் என்றார்.
இதுபற்றி மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பதோல் கூறுகையில், தாராவியின் எல்லா இடங்களையும் அதானி குரூப்புக்கு வழங்குவதற்கு அரசு முடிவெடுத்திருப்பதுதான் ஆரம்பம். இப்போது வொர்லியில் உள்ள பல கோடி ரூபாய் பால்பண்ணை நிலத்தையும் மலிவான விலைக்குத் தருவதற்கு முயற்சிக்கின்றனர் என்றார்.
தாராவி திட்டம் பற்றி உத்தவ் தாக்கரே மேலும் கூறுகையில், தாராவி மறுமேம்பாடு திட்டம் என்பது என்ன. மும்பையையும் தாராவியையும் அதானிக்கு தாரைவார்க்க அவர்கள் முயற்சிக்கின்றனர். நகர் முழுவதும் மாற்றக்கூடிய உரிமையை சர்வ சுதந்திரமாக பயன்படுத்த அதானிக்கு அனுமதி தந்துள்ளனர். தாராவியில் உள்ள 590 ஏக்கரை மேம்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மும்பை முழுவதும் இடம் வேண்டும். தாராவி மக்களுக்கு தாராவியில்மட்டும்தான் வீடுகள் தர வேண்டும். இதை அதானியால் செய்ய முடியாவிட்டால் அதை அவர் சொல்ல வேண்டும். இந்த டெண்டரை ரத்து செய்துவிட்டு புதிய டெண்டர் விடவேண்டும் என்றார்.
2022 நவம்பரில் கௌதம் அதானி தலைமையிலான அதானி ரியால்டி 259 ஹெக்டேர் தாராவி கிளஸ்டர் மறுமேம்பாடு திட்டத்துக்கான டெண்டரை பெற்றது. திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.20,000 கோடி ஆகும்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications