இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளின் விபரங்களை சேகரிக்க UDGAM - Unclaimed Deposits Gateway to Access inforMation என்னும் UDGAM தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட இந்த UDGAM போர்டல் வாயிலாக, பொது மக்களின் நேரடியாக பயன்படுத்தும் வகையில், பல வங்கிகளில் உள்ள கோரப்படாத டெபாசிட்களை ஒரே இடத்தில் தேடுவதை எளிதாக்குகிறது. ரிசர்வ் வங்கி இத்தளம் குறித்த அறிவிப்பை ஏப்ரல் மாதம் நடந்த இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் அறிவித்தது.

ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் டிஇஏ (Depositor Education and Awareness) பண்ட்-க்கு மாற்றப்படும் உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளுக்கான விபரங்கள் இந்த போர்டலில் இருக்கும். மேலும் இந்த தளம் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் முழுமையாக தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கிறது.
இந்திய வங்கித்துறையில் சுமார் 35000 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை கோரப்படாத டெபாசிட்டுகள் உள்ளது, இதை தற்போது ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் இதற்கு தீர்வு காணும் பொருட்டு இந்த UDGAM போர்டல் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஒரு வங்கி கணக்கு அது சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்காகவும் இருக்கலாம், இத்தகையை கணக்கு 10 வருடம் இயக்கப்படாமல் இருந்தால் அதை உரிமை கோரப்படாத டெபாசிட்டுகள் என கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதேபோல தான் வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளுக்கும் பொருந்தும்.
இப்படி உரிமை கோரப்படாத டெபாசிட்டுகள் அனைத்தும் வங்கிகள் ரிசர்வ் வங்கி கீழ் செயல்படும் DEA FUND-க்கு மாற்றப்படும். மக்கள் ஒவ்வொரு வங்கிக்கும் தங்களுடைய உறவினரின் மரணத்திற்கு பின்பு விண்ணப்பம் கொடுத்து கிளைம் செய்வது என்பது கடினமான பணி. இதை சரி செய்யவே ஆர்பிஐ UDGAM போர்டல் உருவாக்கியுள்ளது.
தற்போது UDGAM போர்டலில் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, சென்டர்ல் பேங்க் ஆப் இந்தியா, தனலட்சுமி பேங்க், சௌத் இந்தியன் பேங்க், டிபிஎஸ் பேங்க், சிட்டி பேங்க் ஆகியவை இணைக்கப்பட்டு உள்ளது. இத்தளத்திற்கு செல்ல இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யவும் - https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/login
லாகின் செய்த பின்பு குறிப்பிட்ட விபரங்களை கொடுத்து உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளின் விபரங்களை பெற முடியும்.


Click it and Unblock the Notifications