இந்திய ரிசர்வ் வங்கி UDGAM தளத்தில் இதுவரை 30 வங்கிகளை இணைத்து அசத்தியுள்ளது. இந்திய மக்களுக்கு சொந்தமான மற்றும் உரிமை கோரப்படாத டெபாசிட் பணத்தை மக்கள் தேட ஒரு சென்டரலைஸ்டு தளத்தை உருவாக்க திட்டமிட்டு UDGAM உருவானது.
UDGAM தளத்தில் இணைக்கப்பட்ட வங்கிகள் கீழே உள்ள கோரப்படாத டெபாசிட் தொகையை இதன் மூலம் அணுக முடியும், செப்டம்பர் 28 நிலவரப்படி 30 வங்கிகளை இணைக்கப்பட்ட பின்பு உரிமை கோரப்படாத வைப்புகளில் சுமார் 90 சதவீதத்தை தற்போது இத்தளத்திற்குள் வந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் உரிமை கோரப்படாத வைப்புகள் அனைத்தும் ஆர்பிஐ கீழ் இயங்கும் Depositor Education and Awareness (DEA) பண்ட் கீழ் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு UDGAM தளம் துவங்கும் போது ஏழு வங்கிகள் மட்டுமே இத்தளத்தில் இணைக்கப்பட்டது. ஆர்பிஐ திட்டமிட்டப்படி படிப்படியாக அனைத்து வங்கிகளையும் இணைத்து உள்ளது. மீதமுள்ள 10 சதவீத தொகைக்கு தொடர்புடைய வங்கிகளும் இதில் சேர்க்கப்பட உள்ளது என ரிசர்வ் வங்கியின் தலைமை ஜெனரல் மேலாளர் யோகேஷ் தயாள் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 2023 இல் UDGAM என்ற centralised web portal-ஐ அறிமுகப்படுத்தியது, ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட இந்த UDGAM போர்டல் வாயிலாக, பொது மக்களின் நேரடியாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருக்கும் பல்வேறு வங்கிகளில் உள்ள கோரப்படாத டெபாசிட்களை ஒரே இடத்தில் தேடுவதை எளிதாக்குகிறது. ரிசர்வ் வங்கி இத்தளம் குறித்த அறிவிப்பை ஏப்ரல் மாதம் நடந்த இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தனலக்ஷ்மி வங்கி, சவுத் இந்தியன் வங்கி, டிபிஎஸ் பேங்க் இந்தியா மற்றும் சிட்டி பேங்க் ஆகிய ஏழு வங்கிகள் முதல் கட்டமாக இந்த போர்டல் இணைக்கப்பட்டு தற்போது வங்கிகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
உங்கள் குடும்பம் தொடர்பான கோரப்படாத டெபாசிட் பணம் ஏதேனும் உள்ளதாக என்பதை செக் செய்ய UDGAMதளத்திற்கு செல்ல இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யவும் - https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/login
லாகின் செய்த பின்பு குறிப்பிட்ட விபரங்களை கொடுத்து உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளின் விபரங்களை நீங்கள் பெறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications