உகாண்டாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றுதான் மத்வானி குழும நிறுவனம். இந்தக் குழுமம் கென்யா, உகாண்டா, ருவாண்டா, தெற்கு சூடான், மத்திய கிழக்கு, தான்சானியா, இந்தியா மற்றும் வட அமெரிக்காவில் முதலீடுகளைக் கொண்டுள்ளது. கடந்த 1912இல் அப்போது 18 வயதாக இருந்த முல்ஜிபாய் மத்வானி, உகாண்டாவில் உள்ள ஜின்ஜா நகரத்துக்கு வந்தார். 1914இல் அவர் தனது சகோதரர்களின் சிறு வர்த்தக நிறுவனத்தில் இணைந்தார். பின்னர், உகாண்டாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஈட்டும் ஒரு வணிகத்தை உருவாக்க உதவி புரிந்தார்.
1972இல் ஆசியாவில் இருந்து முல்ஜிபாய் மத்வானி வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, முல்ஜ்பாயின் 5 மகன்களும் வணிகத்தின் சில பகுதிகளை சமமாகப் பிரித்துக் கொண்டனர். மத்வானி குழுவின் வணிகங்கள் அவரின் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. ஆனால், பிற வணிகங்களுடன் கூட்டு முயற்சிகளாகும். பின்னர், 1970-களில், மத்வானி குடும்பமே உகாண்டாவில் இருந்து வெளியேற்றப்பட்டது. அவர்களின் வணிகங்கள் தவறாக நிர்வகிக்கப்பட்டதால், அழிந்துபோகும் நிலைக்கு வந்தது.

பின்னர், 1985ஆம் ஆண்டில், மத்வானி குடும்பம் உகாண்டாவுக்கு மீண்டும் திரும்பியது. உலக வங்கி, உகாண்டா மேம்பாட்டு வங்கி, கிழக்கு ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கிகள் மூலம் கடன் பெற்று தங்கள் வணிகங்களை மீண்டும் உயிர்ப்பித்து மறுவாழ்வு அளித்து, புதியவற்றைத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தான், மத்வானி குழுமம் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி - மத்வானி குழுமத்திற்கு இடையேயான சந்திப்பை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்வானி குழுமம், அதன் நிறுவனமான INSCO மூலம் இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் கண்ணாடி உற்பத்தியாளரான ஹிந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (HNGIL) ஐ கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி வரையிலான முதலீடுகளை இந்தியாவில் செய்ய மத்வானி குழுமம் ஆராய்ந்து வருகிறது. இவை இந்தியாவில் தொழில்துறை விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் பிரதமர் மோடியை மத்வானி குழுமத்தின் விளம்பரதாரர் ஷ்ராய் மத்வானி, அவரது மனைவி அபர்ணா மத்வானி மற்றும் குழும இயக்குநர் நிதின் காதியா ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், இந்தியாவில் முன்மொழியப்பட்ட வணிக முயற்சிகள், கையகப்படுத்தல் மற்றும் சாத்தியமான எதிர்கால முதலீடுகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, மத்வானி குழுமத்தின் முதலீட்டுத் திட்டங்களை வரவேற்று, இந்தியாவில் அவர்களின் முயற்சிகளுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொடர்ச்சியான வளர்ச்சிப் பயணத்திற்கு பங்களிக்கவும் குழுமம் எடுத்த முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
மத்வானி குழுமம் பல்வேறு நாடுகளில், முதன்மையாக ஆப்பிரிக்காவில் உற்பத்தி, விவசாயம், விருந்தோம்பல் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த குழுமம் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதால், இந்தியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் இடையே வளர்ந்து வரும் வணிக ஈடுபாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துக்கு மத்வானி குழுமம் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications