இந்தியாவை சேர்ந்த உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்வதற்கே முன்னுரிமை தருவதாக ஒரு ஆய்வு அறிக்கை வெளி வந்துள்ளது. கோடக் பிரைவேட் பேங்கிங் நிறுவனம் சார்பாக Top of the Pyramid என்ற தலைப்பில் இந்தியாவை சேர்ந்த உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் எதில் அதிக முதலீட்டை செய்திருக்கின்றனர் என்பது குறித்து ஆய்வினை நடத்தி வெளியிட்டு இருக்கிறது.
அதில் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களில் 89 சதவீதம் பேர் பங்குகளில் முதலீடு செய்வதை தான் சாதகமாக கூறுகிறார்கள். அதற்கு அடுத்ததாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்ஷூரன்ஸ் மற்றும் யூலிப் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு 40 சதவீதம் பேரும், பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்ய 15 சதவீதம் பெயரும் முன்னுரிமை தருவது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் வசிக்கும் 150 உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களிடம் கோடக் பிரைவேட் பேங்கிங் நிறுவனம் இந்த ஆய்வினை நடத்தி இருக்கிறது. இந்தியாவில் 2024 ஆம் ஆண்டினை பொருத்தவரை 2.18 லட்சம் பேர் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களாக இருந்தனர், 2028 ஆம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை 4.30 லட்சமாக அதிகரிக்க இருக்கிறது.
இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதில் இவர்கள் தற்போது கவனம் செலுத்துவது தெரிய வந்துள்ளது. சுமார் 58% பேர் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் போது நல்ல லாபம் கிடைப்பதாக நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். அது தவிர தன்னுடைய போர்ட் போலியோவை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு இவ்வாறு வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறோம் என தெரிவிக்கிறார்கள். 47 சதவீதம் பேர் தாங்கள் வெளிநாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுவதாக கூறியுள்ளனர்.
ஐந்தில் ஒரு முதலீட்டாளர் கடன் பத்திரங்களில் தங்களுடைய பங்களிப்பை குறைப்பதற்கும் , பத்தில் ஏழு பேர் ஈக்விட்டி மற்றும் ரியல் எஸ்டேட்டில் தங்களுடைய முதலீட்டை அதிகரிப்பதற்கும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாத காலமாகவே இந்திய பங்குச்சந்தை சரிவடைந்தது, தற்போது மீண்டு வருகிறது.
பங்குச்சந்தை சரிவில் இருந்தாலும் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் தொடர்ந்து பங்குச்சந்தை மீது நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த ஆய்வறிக்கை காட்டுவதாக கோடக் பிரைவேட் பேங்கிங் கூறியுள்ளது. கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளது ஆனால் அதிலிருந்து எல்லாமே மீண்டு வந்து விட்டது என்பதால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் தான் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications