சென்னை: இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்திருக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக ஆதார் அட்டை இருக்கிறது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் தொடங்கி அனைத்து முக்கிய சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம்.
ஆதார் எண்: ஆதார் என்பது இந்தியாவை சேர்ந்த குடிமக்களுக்கு வழங்க படக்கூடிய 12 இலக்கம் கொண்ட ஒரு தனித்துவமான அடையாள எண். இந்த ஆதார் எண்ணை தான் நம்முடைய அடையாளம் மற்றும் முகவரிக்கான ஒரு முக்கியமான சான்றாக பயன்படுத்துகிறோம். அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கும் நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கும் ஆதார் இருப்பது அவசியம்.

இலவச சேவைகள் பெறும் தேதி :இந்தியாவில் UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அமைப்புதான் ஆதார் சேவைகளை நிர்வகிக்கிறது. நாம் ஆதாரில் நாம் எந்த ஒரு மாற்றம் செய்வதாக இருந்தாலும் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தான் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தியாவில் ஆதாரில் குறிப்பிட்ட சில மாற்றங்களை நாம் ஆன்லைன் வாயிலாக இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கான கடைசி தேதியாக ஜூன் 14ஆம் தேதி இருந்த நிலையில், இதனை 2026 ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டித்திருக்கிறது ஆதார் அமைப்பு.
2026, ஜூன்14ஆம் தேதி வரை நீட்டிப்பு: இது தொடர்பாக தன்னுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் யுஐடிஏஐ வெளியிட்டு இருக்கும் பதிவில் ஆதாரில் இலவசமாக ஆன்லைனிலேயே ஆவணங்களை பதிவேற்றம் செய்து பெறக்கூடிய சேவைகளுக்கான கடைசி தேதி 2026, 14 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் இந்த இலவச சேவைகளை மைஆதார் தளத்தில் மட்டுமே மக்கள் பெற முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஓராண்டு காலம் அவகாசம்: எனவே ஆதாரில் ஆன்லைனில் உங்களுடைய அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகியவற்றை நாம் அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். பொதுவாக நாம் ஆதார் அட்டையில் முகவரி உள்ளிட்டவற்றை அப்டேட்டாக வைத்திருந்தால் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பிற சேவைகளை நாம் எளிமையாக பெற முடியும்.
எப்படி புதுப்பிப்பது? : நீங்கள் உதாரணமாக ஆதாரில் உங்களின் முகவரியை மாற்ற விரும்புகிறீர்கள் என்றால் myaadhaar.uidai.gov.in என்ற தளத்திற்கு சென்று புதுப்பித்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜூன் 14 வரை இந்த சேவை இலவசம் தான். ஆனால் இதனை நீங்கள் இ சேவை மையங்களில் செய்யும் போது அவர்கள் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மக்கள் இதனை தங்கள் போன் வாயிலாகவே செய்துவிடும்.
மேலே கூறிய இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபியை பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும். இதனை அடுத்து செல்லுபடியாக கூடிய முகவரி ஆவணத்தை ஸ்கேன் செய்து புதிய முகவரியை உள்ளிட வேண்டும். முகவரி சான்றாக ரேசன் அட்டை, சிலிண்டர் பில், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இதில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் அமைப்பு 15 நாட்களில் உங்களின் கோரிக்கையை ஏற்று முகவரியை மாற்றும். இதனை நீங்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொண்டு முகவரி அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications