டெல்லி: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, 'myAadhaar' போர்ட்டலில், மக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக ஆவணப் புதுப்பிப்பு வசதியை பெற முடியும் என்றும் UIDAI தெரிவித்துள்ளது.
இந்திய மக்கள் பயனடையும் நோக்கில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மக்கள் தங்கள் ஆதார் ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆதார் அட்டை வைத்திருப்போர் 'myAadhaar' போர்ட்டல் மூலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக ஆதார் ஆவணப் புதுப்பிப்பு வசதியை பெற முடியும் என்றும் UIDAI ஆணையம் அறிவித்துள்ளது.
இலவச சலுகைக் காலம்!
ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கும் இந்தச் சலுகை மார்ச் 15, 2023 முதல் ஜூன் 14, 2023 வரை அதாவது அடுத்த மூன்று மாதங்களுக்கு கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இச்சேவையை 'myAadhaar' போர்ட்டலில் மட்டுமே இலவசமாகக் கிடைக்கும், அதே நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று புதுப்பித்தால் வழக்கமான கட்டணமான ரூ.50 வசூலிக்கப்படும் என்று ஆதார் நிர்வாகத்தை கவனிக்கும் நோடல் ஏஜென்சி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னென்ன விவரங்கள் புதுப்பிக்கலாம்!
உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் டிஜிட்டல் முறையிலும் விவரங்களை இலவசமாக அடுத்த 3 மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம். மேலும் அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களுக்கும் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் விவரங்களை புதுப்பிப்பது எப்படி?
ஆதார் அட்டை விவரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்க, பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். அங்கு பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பகிரப்படும் அதன் மூலம் நீங்கள் மாற்றப்பட வேண்டிய விவரங்களை உள்ளிட்டு மாற்றிக் கொள்ளலாம்.
அப்டேட், டெவிவரி
மாற்றப்பட்ட விவரங்கள் குறிப்பிட்ட நாளில் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுவிடும். அதன்பின் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையானது 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் உங்கள் வீட்டு முகவரியை வந்து சேரும்.
ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை உங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
மோசடிகள்
சமீபத்தில் ஆதார் எண் மூலம் பல மோசடிகள் நடந்து வருகிறது. இந்த மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, பயனர்கள் அதாவது மக்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களின் ஆதார் அட்டை விவரங்களைப் புதுப்பிக்குமாறு மோடி அரசு வலியுறுத்தியுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வருடங்கள்
நவம்பர் 9, 2022 வெளியான அறிவிப்பின்படி, "ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறையாவது, அடையாளச் சான்றைச் (POI) சமர்ப்பிப்பதன் மூலம், ஆதாரில் உள்ள ஆதார் ஆவணங்களைப் புதுப்பிக்கலாம்.
புதுப்பிப்பு
ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைச் சட்டம் 10ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிச் சான்று (POA) ஆவணங்கள், மத்திய அடையாளத் தரவுக் களஞ்சியத்தில் (CIDR) அவற்றின் தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக, குறிப்பிட்ட நேரத்திற்கு புதுப்பிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications