இந்திய மக்களின் அத்தியாவசிய அடையாள ஆவணமாக ஆதார் அட்டை செயல்படுகிறது. நம் வீட்டை மாற்றினாலும், ஊரை மாற்றினாலும் தொலைபேசி எண்ணை மாற்றினாலும் முதலில் நம் ஆதார் கார்டில் அதனை அப்டேட் செய்துவிட வேண்டும்.
பல்வேறு அரசு நலத்திட்டங்கள் ஆகட்டும் பாஸ்போர்ட் ,சிம் கார்டு வாங்குவது என பல சேவைகளுக்கும் ஆதார் அட்டையை நாம் மிக அடிப்படையான ஒன்றாக பயன்படுத்துகிறோம் . தற்போது ஆதார் அட்டையில் நாம் முகவரி மாற்றங்களை வீட்டிலிருந்தபடியே இணையதளம் அல்லது செயலி வாயிலாகவே மேற்கொள்ள முடிகிறது. ஆனால் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை மாற்ற வேண்டும் என்றால் நாம் இ சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது.

இந்த நிலை கூடிய விரைவில் மாற்றம் அடைய இருக்கிறது. யுஐடிஏஐ அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் டிசம்பர் மாதத்தில் இருந்து புதிய ஆதார் செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த ஆதார் செயலி பயன்பாட்டுக்கு வந்து விட்டால் பொதுமக்கள் இ சேவை மையங்களுக்கே செல்ல தேவையில்லை எப்படி முகவரியை தற்போது மாற்றிக் கொள்கிறார்களோ அதே போல இந்த செயலி வாயிலாகவே தங்களுடைய செல்போன் எண் உள்ளிட்டவற்றையும் மாற்றிக்கொள்ள முடியும் என கூறியிருக்கிறார்.
அதாவது பயோமெட்ரிக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஆதார் மாற்றங்களை புதிய ஆதார் செயலி மூலம் face authentication முறையில் மாற்ற முடியும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். இதன் காரணமாக நாம் இ சேவை மையங்களுக்கு சென்று பெற்று வந்த அனைத்து ஆதார் சேவைகளையும் நம்முடைய முக அடையாள சரிபார்ப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலிலேயே முடித்துக் கொள்ள முடியும் என கூறுகிறார்.
நாம் எங்கு சென்றாலும் கையில் ஆதார் அட்டையோ ,ஆதார் அட்டை நகலையோ கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை என சுட்டிக்காட்டும் அவர், விமான நிலையம் , ரயில் பயணங்கள் மற்றும் பிற சேவைகளை பெறுவதற்கு எல்லாம் ஆதார் அட்டையை கேட்கும்போது நாம் இந்த செயலி வாயிலாக நம் ஆதார் அட்டைக்கான கியூஆர் கோடினை காட்டினாலே போதும் அதனை அடிப்படையாகக் கொண்டு டிஜிட்டல் சரிபார்ப்பு முடிந்துவிடும் என்கிறார்.
ஆதார் அட்டை கொண்டு ஒருவரின் அடையாளத்தை சரிபார்க்க நேரம் ஆகும் நிலையில் இந்த முறையில் சில நொடிகளில் அடையாள சரிபார்ப்பு முடிந்துவிடும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் யுபிஐ வருகை எப்படி பண பரிமாற்றத்தை எளிதாக்கி இருக்கிறதோ அதே போல இந்த புதிய ஆதார் செயலி ஆதார் சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளையும் ஒரு செயலிக்குள்ளேயே கொண்டு வந்துவிடும் என தெரிவித்துள்ளார். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே இனி ஆதார் தொடர்பான பல்வேறு சேவைகளும் எளிமையாக பெற முடியும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications