இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணங்குமாக ஆதார் கார்டை நாம் பயன்படுத்துகிறோம். நம்முடைய புகைப்பட சான்றாகவும் , முகவரி மற்றும் அடையாளச் சான்றாகவும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அரசின் பல்வேறு நல திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கியமானதாக இருக்கிறது.
ஆதார் கார்டு: இந்தியாவில் இரண்டு விதங்களில் ஆதார் கார்டு வழங்கப்படுகின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வழக்கமான ஆதார் கார்டும் வழங்கப்படுகின்றன. 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படக்கூடிய பால் ஆதார் கார்டில் அவர்களுடைய பயோமெட்ரிக் தரவுகளான கருவிழி மற்றும் கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்காது.

5 வயது முடிந்தால் பயோமெட்ரிக் அப்டேட் :குழந்தைக்கு ஐந்து வயது முடிந்த பிறகு பெற்றோர் அவர்களை ஆதார் இ சேவை மையத்திற்கு அழைத்து சென்று கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு ஐந்து வயது முடிந்த குழந்தைகளுக்கு அவர்கள் 7 வயது ஆவதற்குள் பயோமெட்ரிக் தரவுகளை அப்டேட் செய்யவில்லை என்றால் அவர்களுக்கான ஆதார் அட்டை செயலிழந்து போய்விடும் .
பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம்: பெற்றோர் தங்களுக்கு 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களின் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களை சேர்த்து அப்டேட் செய்யுங்கள் என ஆதாரை கண்காணித்து வரக்கூடிய யுஐடிஏஐ அமைப்பு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த சூழலில் குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட்டினை எளிமையாகும் வகையில் பள்ளிகளிலேயே பயோமெட்ரிக் அப்டேட் நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பள்ளிகளில் மையம்: பிடிஐ தளத்திற்கு பேட்டி அளித்துள்ள யுஐடிஏஐ தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் இந்தியாவில் கிட்டத்தட்ட 7 கோடிக்கும் அதிகமான குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்கள் இதுவரை அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வதை எளிமையாக்கும் வகையில் பள்ளிகளிலேயே ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் மையங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
பள்ளிகளில் மையங்கள் அமைப்பு: இதற்கான திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் பெற்றோரின் அனுமதியோடு பள்ளிகளிலேயே குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்கள் ஆதாரில் அப்டேட் செய்யப்படுவதற்கான தொழில்நுட்பங்களை தற்போது சோதனை செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். அடுத்த 45 லிருந்து 60 நாட்களுக்குள் இது தயாராகிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் .
அப்டேட் செய்தால் தான் ஸ்காலர்ஷிப்: 5 வயது முடிந்த பிறகு ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து வைத்துக் கொள்வது குழந்தைகள் பல்வேறு அரசு சலுகைகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். பள்ளிகளில் அட்மிஷன் போடுவது ,நுழைவுத் தேர்வு எழுதுவது, ஸ்காலர்ஷிப் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு அப்டேட் செய்யப்பட்ட ஆதார் அட்டை இருப்பது மிகவும் முக்கியம் எனக் கூறியிருக்கிறார்.
60 நாட்களில்: அதேபோல 15 வயது முடிந்த பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதும் கட்டாயம் என்பதால் முதலில் பள்ளிகளிலும் பின்னர் கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் அப்டேட் மையங்கள் கொண்டுவரப்படும் எனக் கூறியிருக்கிறார் .நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயோமெட்ரிக் அப்டேட் இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும் அவை அந்த பகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு அங்கே ஒரு ஊழியர் நியமனம் செய்யப்பட்டு இதற்கான உரிய பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications